புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 நவ., 2015

கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்து 14 வயது சிறுமியின் தலையை கவ்விய முதலை


கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்த முதலை கட்டிலில் படுத்திருந்த 14 வயது சிறுமியின் தலையை கவ்வியது. இதனை கண்ட சிறுமியின் அப்பா முதலையுடன் போராடி மகளை காப்பற்றி உள்ளார்.
எனினும் சிறுமி காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலை அவசர சிகிச்சிப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியில் பெய்துவரும் கடும் மழையால் வெள்ள நீர் மற்றும் வான் நீர் என்பன மக்கள் குடியிருப்பினூடு பாய்ந்து வருகிறது.
வெள்ள நீருடன் சேர்ந்து இன்று அதிகாலை 2.45 மணிக்கு பெரிய அளவிலான முதலை ஒன்று கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்தே இச் சிறுமியை தாக்கியுள்ளது.
இச் சிறுமி கனகலிங்கம் விதுசா எனவும் இவர் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவி எனவும் தெரிய வருகிறது.
இது தொடர்பில் சிறுமியின் அப்பா தெரிவிக்கையில்,
தான் காணும்போது மகளின் தலை முதலையின் வாயில் இருந்ததாகவும் தான் ஓடிச்சென்று சத்தமிட்டவாறு மகளின் தோளை பிடித்து இழுத்து காப்பாற்றியதாகவும் மகளின் தலை, உடம்பு மற்றும் கால்களிலும் காயங்களை ஏற்படுத்தி விட்டதாக கூறினார்.