புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 நவ., 2015

முதல்வர் ஜெயலலிதாவை பேஸ்புக்கில் விமர்சித்த வழக்கறிஞர் அதிரடி கைது

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பேஸ்புக்கில் விமர்சித்த வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த தேனாடு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதரன் (40), ஊட்டியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவர் மீது அ.தி.மு.க. நகர செயலாளர் தேவராஜ் ஊட்டி நகர மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், ஊட்டியை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரன் தனது பேஸ்புக் பக்கத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை இழிவுப்படுத்தும் நோக்கத்தில் படம் மற்றும் செய்தி வெளியிட்டு விமர்சித்துள்ளார்.
எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிசார் அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் வைத்துள்ளனர்.