புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 நவ., 2015

இந்திய அணி சுழலில் சுருண்டது தென்னாபிரிக்கா: முதல் நாள் ஹைலைட்ஸ் முழு விவரம்

திய - தென்னாபிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கியது. டாஸ் வென்ற விராட் கோலி யாரும் எதிர்ப்பாராத வண்ணம் பவுலிங்கை தேர்ந்தெடுத்தா
ர்.  1974-ம் ஆண்டுக்கு பிறகு, பெங்களூரு மைதானத்தில் டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்த முதல் கேப்டன் விராட் கோலிதான். 
முதலில் பேட்டிங் செய்வதையே விரும்புவதாக தென்னாபிரிக்க அணி கேப்டன் அம்லா தெரிவித்தார். ஆனால், இந்திய அணி கேப்டன் கோலியின் முடிவு சரியானது என்பதை நிருபிக்கும் விதமாக இந்திய பவுலர்கள் அபாரமாக பந்து வீசி முதல் இன்னிங்சில் 214 ரன்களுக்குள் தென்னாபிரிக்காவை சுருட்டினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் இறுதியில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் குவித்துள்ளது. 

கடந்த டெஸ்டில் சொதப்பிய தவான் இன்று நின்று விளையாடினார். ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பதால், இன்றிரவு மற்றும் நாளை மழை பெய்யாத பட்சத்தில் இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் குவித்து தென் ஆப்பிரிக்காவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

'நறுக்' நாலு பாயின்ட்ஸ்

1. அஷ்வினை முதல் நாளின் எட்டாவது ஓவரிலேயே பந்து வீச அழைத்தார் விராட் கோலி. மைதானம் பேட்டிங்க்கு ஓரளவு சாதகமாக இருந்தும் கூட அஷ்வின் பந்தை எதிர்கொள்ள பயந்து குழப்பமான ஷாட் விளையாடி வான் ஜைல் அவுட் ஆனார். 
நட்சத்திர வீரர் டு பிளசிஸ் அஷ்வின் பந்தை லெக் சைடுக்கு விரட்ட, ஸ்லிப்பில் ஒரு சூப்பர் கேட்ச் பிடித்தார் புஜாரா. எனினும், புஜாரா பிடித்த கேட்சில், மைதானத்தில் உள்ள புற்களில், பந்தின் அடிப்பகுதி லேசாகப்பட்டது போலவும், படாதது போலவும்  ரீப்ளேவில் தெரிந்தது. ஆனால், மூன்றாவது நடுவர் அவுட் என தீர்ப்பளித்தார். சோகத்துடன் வெளியேறினார் டு பிளசிஸ். 

2. வருண் ஆரோன் நம்பவே முடியாத வகையில் அட்டகாசமாக லைன் அண்ட் லெந்தில் ஒரு பந்தை வீசி அம்லாவை போல்டாக்கினார். பந்தை தடுத்தாடும் முடிவில் விளையாடிய அம்லாவுக்கு, தான் போல்ட் முறையில் அவுட் ஆனதை நம்பவே முடியவில்லை. வருண் ஆரோனின் இந்த பந்துக்கு, டுவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்தது.

3. முதல் டெஸ்ட் போலவே இந்த டெஸ்ட் போட்டியிலும் விக்கெட்டுகள் ஒரு பக்கம் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டிருக்க, தனது நூறாவது டெஸ்டில் களமிறங்கினார் டி வில்லியர்ஸ். அவர் களமிறங்கியபோது, மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி ஏ.பி.டி., ஏ.பி.டி என கூக்குரலிட்டு உற்சாகபடுத்தினர். சச்சின், லாரா போன்ற வீரர்களுக்கு பிறகு அயல்மண்ணில் அபார வரவேற்பு பெற்ற வீரர் டி வில்லியர்ஸ் தான்.

105 பந்துகளை சந்தித்து, 11 பவுண்டரியும், 1 சிக்சரும் விளாசி 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார். இந்திய பவுலர்கள் டி வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்த திணறிக்கொண்டிருந்த நிலையில், விக்கெட் கீப்பர் சாஹா அபாரமான ஒரு கேட்ச் பிடித்து டி வில்லியர்ஸை அவுட் ஆக்கினார். 

4. முரளி விஜயும், தவானும் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது முறையாக 50 ரன்களுக்கு மேல் அடித்து ஓப்பனிங் கொடுத்திருக்கின்றனர். மோர்னே மொர்கல், அபாட், ரபடா, தாகீர், டுமினி ஆகியோரின் பந்துவீச்சை அனாயசமாக விளையாடினர் இருவரும். நாளைய தினம் முதல் ஒரு மணிநேரத்தில் விக்கெட் விழாமல் இருவரும் ரன்கள் சேர்த்தால், இந்தியா மிகபெரிய ஸ்கோரை எட்ட அடித்தளமாக அமையும்.