புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2015

வடமாகாண சபையில் காரசாரமான விவாதம்! குற்றச்சாட்டுக்கள் குவிந்தன

முதலமைச்சரின் கீழ் வரும் உள்ளுராட்சி அமைச்சுக்கள் தொடர்பில் காரசாரமான குற்றச்சாட்டுக்கள் இன்றைய அமர்வின் போது வடமாகாண சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் முதலமைச்சர் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பிரதம செயலாளர் செயலகத்திற்கான ஒதுக்கீடு ஆகியவற்றின் மீதான விவாதங்கள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில்,
வரவுசெலவு திட்டத்தின் மீதான 2ம் நாள் விவாதம் இன்றைய தினம் மாகாணசபையில் இடம் பெற்றது.
இதன்போது முதலமைச்சர் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மற்றும் பிரதம செயலாளர் செயலகத்திற்கான ஒதுக்கீடு ஆகியவற்றின் மீதான விவாதங்கள் இன்று நடைபெற்று சபை அங்கீகாரம் பெறப்பட்டிருக்கின்றது.
இதன்போது உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வரும் விடயங்கள் தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளுராட்சி அமைச்சிற்குட்பட்ட வீதிகள் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் பல ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர்கள் கடந்த 40 தொடக்கம் 50 வருடங்களாக புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றன.
இந்நிலையில் அவற்றின் புனரமைப்புக்கு பல ஆயிரம் மில்லியன்கள் தேவை என கணிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், 2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 5 மாவட்டங்களிலும் உள்ள உள்ளுராட்சி அமைச்சின் வீதிகள் புனரமைப்புக்கு 100மில்லியன் நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சபையில் குறை கூறப்பட்டுள்ளது.
மேலும் உள்ளுராட்சி மன்றங்களில் சேவைகள் சீராக இல்லை எனவும் கிளிநொச்சி- கரைச்சி பிரதேச சபையில் ஒப்பந்தக் காரர்களிடம் இலஞ்சம் பெற்றுவிட்டு அதிகாரிகள்
ஒப்பந்தக்காரர்களிடம் அடிவாங்கும் நிலையில் உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் கழிவகற்றல் முறையாக இல்லை எனவும், உள்ளுராட்சிமன்றங்கள் மறுசீரமைக்கப்படவேண்டும். எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இதேவேளை நாளைய தினம் மாகாண விவசாய அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

ad

ad