புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2015

நன்கொடைக்காக சேகரித்த பணத்தை திருடிய நபர்: காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கமெரா

சுவிட்சர்லாந்து நாட்டில் நன்கொடைக்காக வைக்கப்பட்டிருந்த பெட்டியிலிருந்து பணத்தை திருடிய நபர் ஒருவர் கையும் களவுமாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சுவிஸின் பெர்ன் நகரில் உள்ள பாராளு
மன்ற சதுக்கம் ஒன்றில் இயலாதவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடை பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
சில தினங்களுக்கு முன்னர் நன்கொடை பெட்டியில் பணம் போடுவதற்காக வாலிபர் ஒருவர் அறைக்குள் நுழைந்துள்ளார்.
அறைக்குள் ஒருவர் கூட இல்லை என்பதை உணர்ந்த அந்த நபர், கண்ணாடி பெட்டிக்குள் கையை நுழைத்து ஒரு தாளை திருடி தனது பர்ஸில் வைத்துக்கொண்டார்.
பின்னர், கைப்பேசியில் பாடல் கேட்பது போல அங்கிருந்து கூலாக நடந்து வெளியே செல்ல முயன்றுள்ளார்.
ஆனால், நபரின் இந்த இரக்கமற்ற செயல் அங்குள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்ததால், வெளியில் இருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உடனடியாக வந்து நபரை தடுத்து நிறுத்தியுள்ளார்.
கையும் களவுமாக சிக்கியுள்ளதை அறிந்த அந்த நபர், தன்னுடைய பர்ஸில் உள்ளது தனது சொந்த பணம் என்றும், அதனை நன்கொடை கொடுக்க தான் வந்ததாக பொய் கூறியுள்ளார்.
நபரை அழைத்துச்சென்று கணணி திரையை காட்டியபோது, அவர் திருடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாயடைத்து போயுள்ளார்.
பின்னர், நபரிடம் இருந்து பணத்தை பறித்த பாதுகாப்பு அதிகாரி அவரை மாநகர பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
நன்கொடைக்காக சேகரிக்கப்படும் பணத்தையும் நபர் ஒருவர் திருட முயற்சித்த சம்பவம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad