புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2015

தாஜுடினின் கொலையுடன் தொடர்பானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்?


ரக்பீ வீரர் வசீம் தாஜுடினின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நால்வரை பாதுகாப்பு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்.
சீ.சீ.டி.வி. கமராவில் பதிவான காணொளிகள் குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சீ.சீ.டி.வி கமரா காணொளிகள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அடையாளம் காணப்பட்டுள்ள நான்கு சந்தேகநபர்களில் மூவர் கடற்படையினர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தாஜுடினின் கொலை தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மூவரிடம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் அந்த காலப் பகுதியில் கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபராக இருந்த எஸ்.ஏ.டி.எஸ்.குணவர்தன ஆகியோரிடமும் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.

அதேபோன்று சில பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளிடமும் விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad