புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2016

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள 3 தனியார் பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அம்மூன்று பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.  சென்னையில் சைதாப் பேட்டை, அடையாறு, மயிலாப்பூர் பள்ளிகளூக்கு மிரட்டல் வந்தது.

ஒரேநாளில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மிரட்டல் வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.  இதனால் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டலால் கிழக்கு கடற்கரைச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதையடுத்து, பள்ளிகளில் வெடிகுண்டு வந்திருப்பதாக வந்த தகவல்களை நம்பவேண்டாம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

ad

ad