புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2016

ராமதாஸ், திருமாவளவனுக்கு நன்றி : டி.ராஜேந்தர்


நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,  “சிம்பு மீது கோவையில்
தொடரப்பட்ட வழக்குக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. முதல் தகவல் அறிக்கையிலும் முகாந்திரம் இல்லை. அந்த பாடலை சிம்பு இணையதளத்தில் வெளியிடவில்லை. அதை அவர் சினிமாவில் பாடவில்லை, டி.வி.யில் பாடவில்லை, மேடையில் பாடவில்லை. ஒலிப்பதிவுக்கூடத்திலும் பாடவில்லை.

அவர் அறையில் பாடப்பட்டு, பிறகு வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட பாடல். அதை யாரோ ஒருவர் திருடி வெளியிட்டு இருக்கிறார். அந்த நபரை கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் புகார் கொடுத்திருந்தேன். அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வேறொருவர் கொடுத்த புகாருக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்கள். எனவே, நான் சிம்புக்கு முன்ஜாமீன் கேட்டு ஒரு மனு தாக்கல் செய்தேன்.

“இது ஒரு சாதாரண வழக்கு. காவலில் வைத்து விசாரிக்கவேண்டிய வழக்கே அல்ல. ஜாமீனில் விடக்கூடிய வழக்கு” என்று நீதிபதி கூறிவிட்டார்.

இது எனது வேண்டுதலுக்கு கிடைத்த வெற்றி. நான் காஞ்சீபுரம் சென்று 3 கோவில்களில் சாமி கும்பிட்டேன். யாகம் வளர்த்தேன். பின்னர் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தேன். சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவுக்கும் சென்றேன். அத்தனை பிரார்த்தனைகளுக்கும், கடவுள் மீது நான் வைத்த நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி இது.

என் பேட்டியையும், என் மனைவியின் பேட்டியையும் பார்த்துவிட்டு, வழக்குகளை வாபஸ் பெற்ற டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் ஆகியோருக்கு நன்றி.

இந்த வழக்குகள் வாபஸ் ஆகவேண்டும் என்று வேண்டிக்கொண்ட லட்சிய தி.மு.க தொண்டர்கள், சிம்புவின் ரசிகர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’என்று கூறினார். 

ad

ad