புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2016

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளைக் கொண்டு வடக்கு இராணுவ முகாம்களை சோதனையிட முயற்சி

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளைக் கொண்டு வடக்கு இராணுவ முகாம்களை சோதனையிட முயற்சிக்கப்பட்டு
வருவதாக  செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு இராணுவ முகாம்களில் வதை முகாம்கள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, ஐக்கிய நாடுகள் அதிகாரிகளைக் கொண்டு வடக்கின் இராணுவ முகாம்களை சோதனையிடவே முயற்சிக்கப்படுகின்றது.
இந்த முயற்சியில் வடக்கைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளனர்.
வலிகாமம் வடக்கில் இவ்வாறான இராணுவ வதை முகாம் ஒன்று காணப்பட்டதாக குறித்த அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இலங்கை இராணுவம் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கை இராணுவத்தினர் வதை முகாம்களை நடத்தி செல்வதாக போலி குற்றச்சாட்டுக்களை சுமத்த முயற்சிக்கப்படுகின்றது.

வடக்கைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் இதற்கான முயற்சிகளை இப்போதே ஆரம்பித்துள்ளனர் என உயர்மட்டப் பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதுஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளைக் கொண்டு வடக்கு இராணுவ முகாம்களை சோதனையிட முயற்சி

ad

ad