புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2016

தமிழ் மக்கள் பேரவையில் இணையுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் விடுத்தவேண்டுகோளை முன்னாள் சட்டமா அதிபரும் சட்டவாக்க நிபுணருமான சிவா பசுபதி நிராகரித்துள்ளார். மேற்கண்டவாறு த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பேரவையின் அரசியல் மீளமைப்பு தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள உபகுழுவுக்கு தமது பிரதிநிதியாக செயற்படும் வகையிலேயே விக்னேஸ்வரன் சிவா பசுபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவுஸ்திரேலியாவில் தற்போது வசித்து வரும் சிவா பசுபதி அண்மையில் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் சென்றிருந்தார். இதன்போதே தொலைபேசியின் ஊடாக அவரை தொடர்பு கொண்ட விக்னேஸ்வரன் தமது கோரிக்கையை விடுத்துள்ளார். எனினும் தமிழர் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுக்காண முயற்சிக்கப்படும்போது தமிழர்கள் ஒற்றுமையாக செயற்படவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட சிவா பசுபதி தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களை தற்போது நிறுவுவது பொருத்தமற்றது என்று தெரிவித்துள்ளார். இதனை விக்னேஸ்வரன் ஏற்கமறுத்து விடாப்பிடியாக இருந்தபோதும் பசுபதி தளர்ந்துபோகாமல் தமது பதிலில் உறுதியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் விக்னேஸ்வரன் தமது தொலைபேசி அழைப்பு நிறுத்திவிட்டதாகவும் இதனால் முதலமைச்சர் கோபம் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவா பசுபதியை கொண்டு 1985ஆம் ஆண்டு திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழர்களின் முழுமையான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் வண்ணம் யோசனைகளை முன்வைக்கவிருந்தார் என்று நம்பப்படுகிறது. இதேவேளை 2003ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாக சபை யோசனை வரைபை முன்வைத்தவர் சிவா பசுபதி என்பது குறிப்பிடத்தக்கது. என த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையில் இணையுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் விடுத்தவேண்டுகோளை முன்னாள் சட்டமா அதிபரும் சட்டவாக்க நிபுணருமான சிவா பசுபதி நிராகரித்துள்ளார்.
மேற்கண்டவாறு த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பேரவையின் அரசியல் மீளமைப்பு தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள உபகுழுவுக்கு தமது பிரதிநிதியாக செயற்படும் வகையிலேயே விக்னேஸ்வரன் சிவா பசுபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அவுஸ்திரேலியாவில் தற்போது வசித்து வரும் சிவா பசுபதி அண்மையில் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

இதன்போதே தொலைபேசியின் ஊடாக அவரை தொடர்பு கொண்ட விக்னேஸ்வரன் தமது கோரிக்கையை விடுத்துள்ளார்.

எனினும் தமிழர் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுக்காண முயற்சிக்கப்படும்போது தமிழர்கள் ஒற்றுமையாக செயற்படவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட சிவா பசுபதி தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களை தற்போது நிறுவுவது பொருத்தமற்றது என்று தெரிவித்துள்ளார்.

இதனை விக்னேஸ்வரன் ஏற்கமறுத்து விடாப்பிடியாக இருந்தபோதும் பசுபதி தளர்ந்துபோகாமல் தமது பதிலில் உறுதியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் விக்னேஸ்வரன் தமது தொலைபேசி அழைப்பு நிறுத்திவிட்டதாகவும் இதனால் முதலமைச்சர் கோபம் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவா பசுபதியை கொண்டு 1985ஆம் ஆண்டு திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழர்களின் முழுமையான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் வண்ணம் யோசனைகளை முன்வைக்கவிருந்தார் என்று நம்பப்படுகிறது.

இதேவேளை 2003ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாக சபை யோசனை வரைபை முன்வைத்தவர் சிவா பசுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

என த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad