புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2016

புலம்பெயர் தமிழர் இனி பலாலி விமான நிலையத்திலே நேரடியாக இறங்கலாம ..

பலாலி விமான நிலை யத்தை சர்வதேச விமான நிலையமாக மா ற்ற உள்ளமை வட பகுதி பொருளாதராம வேலை வாய்ப்பு புலம்பெயர் தமிழரின் பொருள் பணம் வீண் விரயம் ஆதல் கால தா மதமாகா மை  என பல வசதி களை உண்டுபண்ணும் பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு அர­சாங்கம் சம்­மதம் தெரி­வித்­துள்­ளது. ஆனால், இதற்­காக மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­மாட்­டாது என இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.
இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,
வடக்கு, கிழக்கில் நாம் பல்­வேறு அபி­வி­ருத்­தி­களை, பொரு­ளா­தார வல­யங்­களை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்றோம். அதற்­கான காலம் தற்­போது எட்­டி­யுள்­ளது.
வடக்கில் குறிப்­பாக பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு பல்­வேறு தரப்­பி­னரும் சாத­க­மான கருத்­தி­லுள்­ளனர். ஆனால் அவ்­வாறு மாற்­று­வ­தற்கு மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­வதை நாம் விரும்­பவில்லை.
இதனைத் தெளி­வு­ப­டுத்தி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகி­யோ­ருடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டு ­வந்த நிலையில் தற்போது இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.
குறிப்­பாக பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச தரத்தில் மாற்­று­வ­தற்கு விமான ஓடு பாதைகள் உட்­பட பல அபி­வி­ருத்­தி­களைச் செய்­வ­தற்கு நிலப்­ப­ரப்பு தேவை­யாக உள்­ளது.
இதற்­காக மக்­களின் காணிகள் சுவீ­கரிக்கும் நட­வ­டிக்­கைகள் நடை­பெற்­ற­ போதும் நாம் பல பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யதன் பய­னாக மக்­களின் காணி­களை சுவீ­கரிக்­காது கடற்­க­ரை­யோ­ரங்­களில் மண்ணை நிரப்பி அதற்கு ஏற்ற சூழலை உரு­வாக்­கு­வ­தற்­கான திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.
மேலும் இதற்கான திட்ட முன்மொழிவுகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வெகு விரைவில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார்.

ad

ad