புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2016

10-ம் வகுப்பு மாணவிக்கு இன்று நடக்கவிருந்த இளவயது திருமணம் தடுத்து நிறுத்தம்



நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள தேவாங்குறிச்சியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வரும் சுவாதி என்ற 15 வயது சிறுமிக்கும், சேலம் மாவட்டம், அமரங்குந்தியைச் சேர்ந்த துரைசாமி மகன் மகேந்திரனுக்கும் (வயது-33) என்பவருக்கும், இன்று வெள்ளிக்கிழமை (பிப்.5) காலை தாரமங்கலம் முருகன் கோயிலில் திருமணம் நடக்க இருப்பதாக நாமக்கல் சைல்டு லைன் அலுவலகத்துக்கு நேற்று மாலை தகவல் வந்தது.

  இதையடுத்து, தேவனாகுறிச்சியிலுள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்ற ஆள் கடத்தல் பிரிவு உதவி ஆய்வாளர் தமிழ்செல்வி மற்றும் “சைல்டுலைன்” அமைப்பின் உறுப்பினர் அமுதா, சமூகப் பாதுகாப்புத் துறை அலுவலர் உமா, கிராம நிர்வாக அலுவலர் வெண்ணிலா ஆகியோர் அங்கு சென்று விசாரித்தபோது தகவல் உண்மை எனத் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேசி, திருமணத்தை முன் கூட்டியே தடுத்து நிறுத்திய அதிகாரிகள் பெண்ணுக்கு 18-வயது முடிவதற்குள் திருமணம் செய்யமாட்டோம் என்று சிறுமியின் பெற்றோரிடம் எழுதி வாங்கியதோடு, சிறுமியை உடனடியாக மீட்டு, குழந்தைகள் நலக்குழுமத்தில் மேல் நடவடிக்கைக்காக ஆஐர்படுத்தினர். 

ad

ad