புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2016

கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியிடம் கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் சயிட் அல் ஹுசைன் மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இதன்போது, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் வலியுறுத்தவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால அதனை நேரடியாக மறுத்துரைத்து, உள்நாட்டு விசாரணைக் கட்டமைப்பை வலியுறுத்துவார் என்றும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பான கலப்பு நீதிமன்ற பொறிமுறையை உருவாக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்பனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

நாளை இலங்கை வரும்  ஹுசைன், எதிர்வரும் 9ம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் முன் இலங்கை விஜயம் மற்றும் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பொன்றையும் அவர் நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad