புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2016

ராமேஸ்வரம்-இலங்கை இடையே கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை போக்குவரத்து; இந்திய மத்திய மந்திரி

இந்தியாவில் 111 உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்குவதே எனது இலக்கு. முதற்கட்டமாக, கங்கை, பிரம்மபுத்திரா உட்பட 5 முக்கிய நதிகளில் நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
ஆறுகள் வழியாக வங்காளதேசம் மற்றும் மியான்மர் வரை வணிகம் செய்ய நீர்வழிப்போக்குவரத்து உருவாக்கப்படும்.
இன்னும் 6 மாதங்களுக்குள் பராக்காவில் இருந்து பாட்னா வரை 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்கும் பணி முடிக்கப்படும்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் எலக்ட்ரிக் பைக்குகள், எலக்ட்ரிக் பஸ் மற்றும் கார்கள் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் பெரிய அளவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும்.
செயற்கைகோள்களில் பயன்படுத்துவதை போன்ற லித்தியம்-ஐயோன் பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.
5 ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கங்கையை சுத்தப்படுத்தி கனவை நிறைவேற்றும்.
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டு போக்குவரத்தை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நிதின்கட்கரி பேசினார்.

ad

ad