புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2016

கள்ளக்காதலுக்கு இடையூறு: மகனை கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூர தாய் கள்ளக்காதலனுடன் தலைமறைவு



கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூர தாய், கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

கணவருடன் விவாகரத்து

டெல்லி ஜெ.ஜெ. காலனியை சேர்ந்தவர் வரிதா (வயது 40). கணவரை விவாகரத்து செய்து விட்டு தந்தை ஜோசப் ஜான் வீட்டில் வசித்து வந்தார். வரிதாவுக்கு, நிக்கோலஸ் (15) என்ற மகன் இருந்தான்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரிதா, மகனுடன் திடீரென மாயமானார். இதுபற்றி ஜோசப் ஜான் போலீசில் புகார் கொடுத்தார்.

மகள் மீது சந்தேகம்

ஒரு மாதத்திற்கு பின்னர் நிக்கோலஸ், தாத்தாவை செல்போனில் தொடர்பு கொண்டு தான் புனேயில் இருப்பதாகவும், வரிதா வேறொரு ஆணுடன் வசித்து வருவதாகவும் தெரிவித்தான். மேலும் தனக்கு அம்மாவுடன் வாழ பிடிக்கவில்லை, எனவே தன்னை டெல்லிக்கு அழைத்து செல்லும்படி ஜோசப் ஜானிடம், நிக்கோலஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த எண் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் அன்று வரிதா டெல்லி சென்றார். அவருடன் யூனிஸ்கான் என்பவர் இருந்தார். அப்போது, புனேயில் நிக்கோலஸ் தற்கொலை செய்து கொண்டதாக தந்தையிடம் வரிதா கூறினார். ஆனால் அவர் வரிதாவின் பேச்சை நம்பவில்லை.

போலீஸ் விசாரணை

தனது பேரனை மகளும், யூனிஸ்கானும் சேர்ந்து ஏதோ செய்து விட்டதை உணர்ந்த ஜோசப் ஜான் மீண்டும் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையறிந்த வரிதாவும், யூனிஸ்கானும் தலைமறைவானார்கள்.

நிக்கோலஸ் கடைசியாக ஜோசப் ஜானுடன் பேசியபோது, அவன் புனேயில் இருந்த இடத்தை செல்போன் அலைவரிசை மூலம் போலீசார் கண்டறிந்தனர். உடனே புனே சென்ற போலீசார் நிக்கோலஸ் தங்கி இருந்த வீட்டிற்கு சென்றனர். அந்த வீடு பூட்டிக்கிடந்தது. வீட்டு உரிமையாளரிடம் விசாரித்தபோது, வரிதாவும், யூனிஸ் கானும் கணவன், மனைவி என்று கூறி வசித்து வந்ததாகவும், சொந்த ஊரில் ஒருவர் இறந்து விட்டதாக கூறிவிட்டு சென்ற இருவரும் அதன்பின்னர் திரும்ப வரவில்லை என்றார்.

வீட்டுக்குள் பிணம்

இதையடுத்து போலீசார், வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, படுக்கைக்கு கீழே தரையில் சில மார்பிள் கற்கள் புதிதாக பதிக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த கற்களை அப்புறப்படுத்தி பார்த்தனர்.

அங்கு நிக்கோலஸ் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தான். பிரேத பரிசோதனை அறிக்கையில் நிக்கோலஸ் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வலைவீச்சு

போலீசார் விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகன் என்றும் பாராமல் நிக்கோலசை, அவனது தாயார் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து வரிதா, யூனிஸ்கான் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

ad

ad