புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2016

2015 ஆண்டிற்கான 63-வது தேசிய விருதுகள்!


சினிமா துறையில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2015ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழில் வெளியான 'விசாரணை' படம் தேசிய விருதுகளை அள்ளியது, 'தாரை தப்பட்டை' படத்திற்காக இளையராஜாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'பாகுபலி' சிறந்த படமாகவும், அமிதாப்பச்சன் சிறந்த நடிகராகவும், கங்கனா ரணாவத் சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 



'பாஜிராவ் மஸ்தானி' படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இறுதிச்சுற்று தமிழ்ப் பட நாயகி ரித்திகாவிற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜாவுக்கு, பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடிப்பில் வெளியான படம் 'தாரை தப்பட்டை'. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். இது இளையராஜாவின் 1000மாவது படமாகும். இப்படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

விசாரணை படத்திற்கு மூன்று விருதுகள்  சிறந்த தமிழ்ப்படம் : 'விசாரணை' மொழிவாரியான படங்களில் சிறந்த தமிழ்ப்படமாக 'விசாரணை' தேர்வு செய்யப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி, 'ஆடுகளம்' முருகதாஸ் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். சிறையில் கைதிகள் படும் அவலத்தை இப்படம் வெளிச்சம் போட்டு காட்டியது. விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இப்படம்.

சிறந்த துணை நடிகர் சமுத்திரகனி, இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் ஜொலிப்பவர் சமுத்திரகனி. விசாரணை படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த எடிட்டராக ஈரம் படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகமானவர் மறைந்த கிஷோர். மூளையில் ஏற்பட்ட கட்டியால் கடந்தாண்டு மரணம் அடைந்தார். 

விசாரணை படத்திற்காக சிறந்த எடிட்டிங் செய்தமைக்காக இவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது இவரது இரண்டாவது விருதாகும். இதற்கு முன்னர் 'ஆடுகளம்' படத்திற்கு விருது பெற்றுள்ளார். இறுதிச்சுற்று ரித்திகாவிற்கு சிறப்பு விருது இறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங்கிற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல் பாக்ஸரான ரித்திகா சிங், மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் ஒரு பாக்ஸராகவே நடித்திருந்தார் ரித்திகா. சுதா இயக்கிய இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்ததோடு, வசூலையும் குவித்தது.


தேசிய விருது பட்டியல்....

சிறந்த பின்னணி இசை இளையராஜா (தாரை தப்பட்டை)
சிறந்த படம் : பாகுபலி
சிறந்த நடிகர் : அமிதாப் (பிக்கு)
சிறந்த நடிகை : கங்கனா (தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்)
சிறந்த இயக்குநர் : சஞ்சய் லீலா பன்சாலி
சிறந்த துணை நடிகர் : சமுத்திரகனி (விசாரணை)
சிறந்த துணை நடிகை : தன்வி ஆஷ்மி (பாஜிராவ் மஸ்தானி)
சிறந்த எடிட்டிங் : கிஷோர் (விசாரணை)
சிறந்த குழந்தை : துரந்தோ
சிறந்த நடனம் : ரெமோ டி சோஷா (பாஜிராவ் மஸ்தானி)
சிறந்த பொழுதுபோக்கு படம் : பாஜிராவ் மஸ்தானி
சிறந்த சமூகசேவைக்கான படம் : நிர்ணயாகம் (மலையாளம்)
சிறந்த அனிமேஷன் படம் : டுக் டுக்
சிறந்த மொழிப்படங்கள் : விசாரணை (தமிழ்) கஞ்சே (தெலுங்கு)பத்தேமரி (மலையாளம்)  தம் லகா கி கைசா  (ஹிந்தி)பிரியமாணசம்  (சமஸ்கிருதம்)திதி (கன்னடம்)சவுத்தி கூட்  (பஞ்சாபி)எனிமி (கொங்கனி)பகாடா ரா லுஹா (ஒடியா).

ad

ad