தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று பிரச்சாரத்தில் தேமுசிக சார்பில் பேசிய எல்.கே.சுதீஷ், வெற்றி பெற்று அமைக்கப்படும் அமைச்சரவையில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி அரசில் வைகோவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் இன்று சாத்தூர் பிரச்சாரத்தில் பேசிய வைகோ, ‘’ கூட்டணி ஆட்சியில் எனக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று சகோதரர் சுதீஷ் சொன்னார். சுதீஷ் எல்லை மீறிய உணர்ச்சிவயப்பட்டு அப்படி பேசிவிட்டார்.
விஜயகாந்த் முதலமைச்சர் ஆனபிறகு கூட்டணிக்கட்சிகள் எல்லாம் அமைச்சரவையில் இடம்பெறும். எந்தெந்த இலாக்காக்கள் என்பது அவர் முடிவு செய்யவேண்டியது. துணை முதலைமைச்சர் என்ற பொறுப்போ அல்லது அவையில் அமைச்சர் என்ற பொறுப்போ என் கற்பனையில் கூட இடம்பெறமுடியாது. அந்த எண்ணத்திற்கே ஒரு சதவிகிதம் கூட இடம் கிடையாது. வைகோ சொன்னால் சொன்னதுதான். யாரும் மாற்றமுடியாது’’என்று உறுதியாக கூறினார்.