புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2016

சாவகச்சேரி சம்பவத்தின் பின்னணியில் அடிப்படைவாதிகள் என கூறும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே


சாவகச்சேரி, மறவன்குளம் பிரதேசத்தில் தற்கொலை அங்கி உட்பட வெடி பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவமானது அடிப்படைவாதிகள் சிலரது செயலாக இருக்கலாம் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நேற்று நடந்த இந்த சம்பவத்தை அடுத்து, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பரப்பபட்டு வரும் வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. பல்வேறு தரப்பினர் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இப்படியான சம்பவங்கள் மூலம் பயங்கரவாதம் தலைத்தூக்கும் என்ற கருத்து உண்மைக்கு புறம்பானது. சில ஊடகங்கள் இந்த சம்பவத்தை திரிபுப்படுத்தியுள்ளன.
கடந்த அரசாங்கம் போரை வென்ற போதிலும் மக்களின் மனங்களை வெல்லவில்லை. மைத்திரிபால சிறிசேனவே தமிழ் மக்களின் மனம்  வென்ற தலைவர்.
வடக்கு மக்களின் பிரச்சினை குறித்து சிலர் முன்வைக்கும் விடயங்கள் போலியானவை. மக்களின் தேவை குறித்து அவர்கள் இன்னும் அமைதியாக இருந்து வருகின்றனர்.
வடக்கு மக்களின் காணி மற்றும் வீட்டு பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் வடக்கு மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

ad

ad