புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2016

கருணாநிதி பிரச்சார வேனில் இம்புட்டு வசதியா? (படங்கள்)

சொகுசு வசதிகளுடன் தயாரான பிரச்சார வேனில் திமுக தலைவர் கருணாநிதி தனது வீட்டில் இருந்து பாலவாக்கம் வரை ஆய்வு
பயணம் மேற்கொண்டார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் ஊர், ஊராக சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இதற்காக கோவை மாவட்டம் சிவானந்தா காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ‘வை-பை’, ஹோம் தியேட்டர், எல்.இ.டி. டி.வி. சாய்தள மெத்தை, டைனிங் டேபிள் உள்பட ‘குளுகுளு’ சொகுசு வசதிகளுடன் 7 பேர் அமரக் கூடிய பிரச்சார வேன் தயாரானது.
அந்த வேன் கோவையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டு, தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். வேனில் உள்ளே இருக்கைகள் மற்றும் வசதிகளை ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு பிரச்சார வேன் கொண்டு வரப்பட்டது. அதில், கருணாநிதி பயணம் செய்து, தனது உடல்நிலைக்கு ஏற்றவாறு பிரசார வேன் இருக்கிறதா?. என்பதை சோதித்து பார்த்தார்.
 
கோபாலபுரத்தில் இருந்து பிரசார வேனில் புறப்பட்ட கருணாநிதி பாலவாக்கம் வரை சுமார் 11.1 கிலோ மீட்டர் பயணம் செய்த பின்னர் கோபாலபுரம் திரும்பினார். கருணாநிதியுடன் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோர் உடன் சென்றனர்.

சக்கர நாற்காலி மூலம் கருணாநிதி வேனில் ஏறுவதற்கு வசதியாக சாய்தள படிகட்டுகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

ad

ad