புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2016

அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வ

அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2
முறை பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது, முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். 

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஐவர் அணி என்று அழைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுக்கும் தலைமை வகித்தார். கட்சி மற்றும் ஆட்சி ரீதியாக எந்தவொரு ஆலோசனை என்றாலும், இந்த ஐவர் குழுவினரை தான் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அழைத்து பேசுவார்.


இந்த நிலையில், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. அது நிரூபணம் ஆகும் வகையில் கட்சியில் இருந்து அவர் ஓரம் கட்டப்பட்டார். 

அவரது ஆதரவாளர்களும் கண்டறியப்பட்டு கட்சி பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசியபோது அந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. 

கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 

அதற்கு மாறாக அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கொண்ட புதிய நால்வர் அணி அப்போது கலந்து கொண்டனர். இதனால் அ.தி.மு.க.வில் இருந்து அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஓரம் கட்டப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதற்காக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை சென்னை வந்தார். காலை 11.30 மணி அளவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதற்காக போயஸ் கார்டன் இல்லத்திற்கு காரில் வந்தார். ஆனால் அப்போது அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன்பிறகு திரும்பிச்சென்ற அவர் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். 

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் காரில் வந்தார். சந்திப்பதற்கான அனுமதியை அவர் முன்கூட்டியே பெற்று இருந்ததால் அவரது காரை போலீசார் வழி மறிக்காமல், உள்ளே அனுமதித்தனர். 

பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை 45 நிமிடங்கள் சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் தன் மீது எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு தன்னிலை விளக்கம் அளித்ததாக தெரிகிறது. 

மாலை 6.45 மணி அளவில் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் திரும்பி சென்றார்.

முதலமைச்சரை நேற்று சந்தித்ததை தொடர்ந்து இன்று கட்சி அலுவலகத்திற்கு ஓ.பன்னீர் செல்வமௌம், நத்தம் விஸ்வநாதனும் வந்துள்ளனர்.சில தினங்களாக கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஓ.பி.பன்னீர் செலவம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொள்ளாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad