புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2016

ஜெயலலிதாவை வீழ்த்தும் எண்ணத்தில் இருக்கும் விஜயகாந்த், தி.மு.க. அணிக்கு வராததற்கான காரணத்தை வெளியில் சொல்ல
இயலாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், "திருச்சியில் நாளை நடைபெறும் சமூகநீதி மாநாட்டில் தவிர்க்க முடியாத காரணத்தால் ராகுல் காந்தியால் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால், அவர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி இன்னும் 2 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் குழுவை இன்று அல்லது நாளை மேலிடம் அறிவிக்கும். 

தி.மு.க. கூட்டணிக்கு விஜயகாந்த் வர வேண்டும் என்று விரும்பினோம். அதற்காக நாங்கள் அழைப்பும் விடுத்தோம். விஜயகாந்த் வரவில்லை. எனவே நாங்கள் அவரை விட்டு விட்டோம். ஜெயலலிதாவை வீழ்த்தும் எண்ணத்தில் இருக்கும் விஜயகாந்த்,  தி.மு.க. அணிக்கு வராததற்கான காரணம் என்னவென்று கேட்கிறீர்கள். சில விஷயங்களை வெளியில் சொல்ல இயலாது. 
 
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஊழல் கூட்டணி என்று பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை விமர்சனம் செய்துள்ளார். அவரது கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கியது ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது. வியாபம் மெகா ஊழலிலும் பா.ஜ.க.வுக்கு தொடர்பு உண்டு. அந்த ஊழலில் பா.ஜ.க. சிக்கி தவித்தது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவான கூட்டணி. தமிழக சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெறும். ஜெயலலிதாவை நாங்கள் வீட்டுக்கு அனுப்புவோம். 

நால்வர் கூட்டணிக்கு இரண்டு சதவீத வாக்குகள் கூட இல்லை. அவர்களை உடைக்க முயற்சி செய்வதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. அந்த கூட்டணியில் இருக்கும் வைகோ எதை சொன்னாலும் அதற்கு நேர்மாறாக முடிவு இருக்கும். கடந்த 30 ஆண்டுகளாக இதுதான் நடந்து வருகிறது" என்று கூறினார்.

ad

ad