புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2016

பாரிஸ் தாக்குதல் சூத்திரதாரி அப்துல் சலாம் காலில் சுடபட்டு உயிருடன் கைதாகினார்

பாரிசில் பயங்கர தாக்குதலை  வடிவமைத்து ஆயுத விநியோகம் செய்ததாக சந்தேகத்துடன் தேடப்படு வந்த  அப்துல் சலாம் பெல்ஜியத்தில் கைதாகி உள்ளார் ஐரோப்பா எங்கும் மிகவும் பாரிய அளவில் தேடப்பட்ட, பரிஸ் பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய ஆயுத வழங்கல்களைச் செய்த பயங்கரவாதி,
சாலா அப்தெல்சலாம், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பெல்ஜியத்தின் தலைநகரமான, புரூக்செல்சின் அருகில் உள்ள மொலன்பீக் நகரத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். மொலன்பீக் நகரம் பயங்கரவாதிகளின் கூடாரமாகத் தொடர்ந்து திகழந்து வந்துள்ளது. கிட்டத்தட்ட ஐரோப்பாவின் அனைத்துப் புலனாய்வு அமைப்புக்களும் இரவு பகலாக இவரைத் தேடிவந்தமை குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை, Forest இல் நடந்த துப்பாக்கிச் சண்டை மற்றும் தேடுதலில், பெல்ஜியப் பிரெஞ்சுப் படைகளால், சாலா அப்தெல்சலாமின் மரபணுக்களும், கைரேகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இத் தாக்குதலில் சாலா அப்தெல்சலாமின் நெருங்கிய தொடர்புடைய Mohamed Belkaïd (alias Samir Bouzid) கொல்லப்பட்டிருந்தார். கடந்த செப்டெம்பர் மாதம், ஒஸ்த்ரியாவின் எல்லையில், செவ்வாய்கிழமை கொல்லப்பட்ட மொகமத் பெல்கய்ட், மற்றும் சாசலா அப்தெல்சலாம் ஆகியோர் எல்லைப்படையினரால் சோதனையிடப்பட்ட பதிவுகள் இவர்களின் நெருக்கத்தை வெளிப்படுத்தி உள்ளது.

17h30 அளவில் சாலா அப்பெதல்சலாம் கைது செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது. காவற்துறையினரிடம் இருந்து தப்பியோட முயன்ற சாலா அப்தெல்சலாம், காவற்துறையினரால் காலில் சுடப்பட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார். இவருடன் இருந்த சக பயங்கரவாதியும் கைது செய்யப்பட்டள்ளார்.
18h00 மணியளவில் பிரான்சின் ஜனாதிபதி, பெல்ஜியப் பிரதமரைச் சந்திக்கச் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து, சாலா அப்தெல்சலாமின் கைதினை ஒருங்கிணைந்த செய்தியாக அறிவிப்பதற்காகவே உடனடியாக ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.
பெல்ஜியத்தின் கடந்த செவ்வாய்க்கிழமைத் தாக்குதல்களில், பிரான்சின் சிறப்புப் படையணிகள் பங்குகொண்டைமையைப் பிரான்சின் உள்துறை அமைச்சர் வெளிப்படுத்தியருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ad

ad