புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2016

கொல்கத்தாவில் மழை: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில் சிக்கல்?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போட்டித்தொடர் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில்,  ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு நடைபெறவுள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் ஆர்வமாக எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் இன்று காலை  6  மணியளவில் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து 9 மணியளவில் மழை பெய்ய துவங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. தற்போது, அங்கு மழை விட்டு வெயில் தலைகாட்ட துவங்கியுள்ளது.  இன்று காலை மழை மிரட்டியதையடுத்து திட்டமிட்ட படி போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்த போது, மைதானங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் பிட்ச் பாரமாரிப்பாளர்கள் விரிப்புகளை பயன்படுத்தி ஏற்பாடுகள் செய்தனர். 

இன்று பிற்பகலுக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், 2 மணிக்கு வெயில் தலைகாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈடன் கார்டன் மைதான அலுவலர்களும் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஒருவேளை, மழை காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்பட்டு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டால், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதில் கடும் சவால் உள்ளது என்பதால், இந்திய ரசிகர்கள் வருண பகவான் கருணை காட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.கொல்கத்தாவில் மழை: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில் சிக்கல்?

ad

ad