புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2016

கோத்தபாய குறித்து சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றை வெளியிட்டார் சரத் பொன்சேகா


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் நடந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் மரணம் குறித்து அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் சிங்க படைப்பிரிவில் பணியாற்றிய காலத்தில் படை அணி ஒன்றை அழைத்துக்கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்றதாகவும் அது போர் சம்பந்தப்பட்ட பயணம் அல்ல எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அணியில் சென்ற சிப்பாய் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சுகவீனமுற்ற நேரத்தில், அந்த சிப்பாயை தரையில் இழுத்துச் செல்லுமாறு கோத்தபாய ஏனைய சிப்பாய்களுக்கு கட்டளையிட்டதாகவும் அவ்வாறு இழுத்துச் செல்லும் போது, கோத்தபாய நோய்வாய்ப்பட்ட அந்த சிப்பாயை காலால் உதைத்ததாகவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இறுதியில் சுகவீனமுற்றிருந்த சிப்பாய் இறந்து போனார், இதனையடுத்து ஆத்திரமடைந்த ஏனைய சிப்பாய்கள் கோத்தபாயவை தாக்கியுள்ளனர். இவ்வாறான சம்பவம் ஒன்று நடந்தால், அதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரியின் இராணுவ வாழ்க்கை அத்துடன் முடிந்து விடும்.

எனினும் அன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதியின் ஊடாக கொடுத்த அரசியல் அழுத்தம் காரணமாக கோத்தபாய இராணுவத்தில் தொடர்ந்தும் இருந்துள்ளார்.

நான் வெளியிட்டுள்ள இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்றால், ஊடகங்கள் முன்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நான் கோத்தபாய ராஜபக்சவுக்கு சவால் விடுக்கின்றேன்.
இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க என்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன எனவும் அமைச்சர் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

ad

ad