புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2016

விஜயகாந்த் முதல்வர் ஆக முடியுமா? ஜோதிடர்களின் கணிப்பு

தேர்தலில் தனித்தே போட்டி, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்’ என்று தேமுதிக
அறிவித்ததை அடுத்து,  அரசியலில் அனல் கனல்...
விஜயகாந்தின் இந்த அறிவிப்பால், அவர் தனது கூட்டணிக்கு வருவார் என காத்திருந்த திமுக அமைதிகாக்க, மக்கள் நலக் கூட்டணியும் பாஜகவும் விஜயகாந்த் தலைமையில் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகின்றன.
இந்நிலையில் விஜயகாந்தின் செல்வாக்கு தமிழகத்தில் எப்படி இருக்கிறது என்பது குறித்து கருத்துக் கணிப்புகள் தொடங்கிவிட்டன. இவை ஒருபக்கம் இருக்கட்டும்.
அவரின் ஜாதகம் என்ன சொல்கிறது, அவர் இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துவாரா? அவரால் முதலமைச்சராக வரமுடியுமா போன்ற கேள்விகளுடன், விஜயகாந்தின் ஜாதகத்தை வைத்து தமிழகத்தின் பிரபல ஜோதிடர்களிடம் கேட்டோம்.

விஜயகாந்தின் மேடைப் பேச்சைப்போலவே அவரின் ஜாதகத்திலும் சிறு குழப்பம். ஒரு தரப்பினர் விஜயகாந்தின் லக்னம்-கும்பம் என்றும், மற்றொரு தரப்பினர் அவர் விருச்சக லக்கனம் என்றும் சொல்கிறார்கள். அவர் எந்த லக்னத்தில்தான் பிறந்தார் என்ற பட்டிமன்றத்துக்குள் போகாமல் இரண்டு லக்னங்களுக்கான பலன்களையும் கணித்து தரச்சொல்லி கேட்டோம்.
அவர்கள் சொன்ன கணிப்புகள் இங்கே...


'ஜோதிடரத்னா' கே.பி.வித்யாதரன்:

விஜயகாந்த் ஜாதக அமைப்பு


 பிறந்த தேதி: 25.08.1952,  லக்னம்: கும்பம், ராசி: துலாம், நட்சத்திரம்; சித்திரை 4-ம் பாதம்

விஜயகாந்தின் அடிப்படை ஜாதக அமைப்பு நன்றாக உள்ளது. பல யோகங்களும் நிறைந்த ஜாதகம். எனினும் இவர் முதல்வராகும் யோகம், ஜாதக அமைப்பில் இல்லை. இவர் கும்ப லக்னத்தில் பிறந்தவர். இவருடைய ஜாதகத்தில் தன,லாபாதிபதியான குரு 3-ல் மறைந்துள்ளார். 3-ம் இடத்தில் மறைந்தது ஒருவிதத்தில் நன்மையே ஆகும். இவருக்கு பூர்வ புண்யாதிபதியாக புதன் வருகிறார். அந்த பூர்வ புண்யாதிபதி புதன் கேதுவுடன் சேர்வது நல்லதல்ல. இவருடைய ஜாதகத்தில் புதன் கேதுவுடன் இணைந்து 6-ம் வீட்டில் மறைந்துவிட்டார். அதனால், முதல்வராகும் வாய்ப்புகள் மிக குறைவுதான்.

கும்ப லக்னம் சனியுடைய லக்னமாகும். சனிக்கு எதிரான கிரகம் செவ்வாய். அந்த செவ்வாயும் இவருடைய ஜாதகத்தில் 10-ல் அமர்ந்திருப்பதால்தான், தவறான முடிவுகளால் அதிக பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. மனோக்காரகன் சந்திரனும் இரண்டு பாவ கிரகங்களால் சூழப்பட்டுள்ளது. அதாவது ஒருபக்கம் செவ்வாய், மறுபக்கம் சனி இப்படி சூழ்ந்துள்ளதால்தான், அதிகம் உணர்ச்சிவசப்படுபவராக இருக்கிறார். அதனால், முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம், குழப்பம், மாறுபட்ட யோசனைகள் போன்ற அமைப்புகளை கொடுக்கும்.
இவருடைய ஜாதகத்தில் கஜகேசரி யோகமெல்லாம் ஒரு நல்ல அமைப்பாகும். ஆனால், தசாபுக்திகளை ஆராயும்போது, முதல்வராகும் யோகம் மிகமிகக் குறைவாகவே உள்ளது. ஆனால், எதிர்காலத்தில் கூட்டணியுடன் ஆட்சியில் அங்கம் வகிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதாவது கூட்டணி அரசாங்கத்தில் இவருக்கும், இவருடைய கட்சிக்கென்று அமைச்சர் பதவி மற்றும் இன்னும் பிற சலுகைகளும் கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டு. அதற்கான சாத்தியங்களெல்லாம் உள்ளன. மற்றபடி முதல்வராகும் வாய்ப்பு முற்றிலும் இல்லை என்றே சொல்லலாம். குறிப்பாக தனித்து நிற்கும்போது அந்த யோகம் முற்றிலுமாக பிரதிபலிக்காது என்றே கூறலாம்.

"ஐந்து ஒன்பதுக்குடையோன், மிஞ்சுபலன் தருவான்" என்ற அற்புதமான பாடல் வரிகளுக்கு ஏற்ப, ஐந்துக்குரிய புதன் தன் சொந்த நட்சத்திரமான ஆயில்யத்தில் அமர்ந்து, ஐந்தாவது திசையாக இருப்பதால், அரசியல் செல்வாக்கு இவருக்கு உண்டு. ஆனால், ஜாதகப் படி 8.2.2024 வரை இந்த புதன் திசை நடைபெற உள்ளது. ஜாதகத்தில் புதன், கேதுவுடன் சேர்ந்து இருப்பதால்தான், தற்போது குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.  புதன் திசை முடியும் வரை, இவர் தனித்து நின்று முதல்வர் பதிவிக்கு வரமுடியாது. அதே நேரத்தில் இவர் எடுக்கும் குழப்பபமான முடிவுகளால், மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்குகூட சரிய வாய்ப்பு உண்டு. தற்போது தனித்துப் போட்டி என்ற அறிவிப்புகூட, நிலையானது அல்ல. மாறுதலுக்கு உட்பட்டது என்றே, இவரது ஜாதகத்தை வைத்து சொல்ல முடிகிறது.

ஜோதிடர் கே.எம்.முருகேசன்:

பிறந்த தேதி: 25.08.1952,  லக்னம்: விருச்சகம், ராசி: துலாம், நட்சத்திரம்: சித்திரை 4-ம் பாதம்  (செவ்வாய் திசை இருப்பு: 2 வருடம் 10 மாதம் 16 நாட்கள்)

தேர்தல் நடைபெறும் சமயத்தில் விஜயகாந்த் ஜாதகத்தை பார்க்கிறபொழுது, கிரக நிலைகள் அடிப்படையில் நன்றாகவே உள்ளது. வெற்றியை நோக்கி செல்லும்போது அலைச்சல் சற்று அதிகமாகவே இருக்கும். வெற்றிக்கு ஜாதகமானவர்கள், இவரை நோக்கி வருவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அந்த வாய்ப்பை, இவர் பயன்படுத்திக் கொள்வதை பொறுத்து அமைந்திருக்கிறது இவருக்கான வெற்றி வாயப்புக்கள். முக்கியமாக முதல்வர் ஆகும் யோகம் இவருக்கு உண்டு. ஆனால், இவரை நோக்கி வரும் வாய்ப்பு, இவருடைய கவன குறைவின் காரணமாக அல்லது இவரது ஜாதக கட்டத்தின் சூல்நிலை காரணமாக, சிதறிப்போவதற்கும் அதிக வாய்ப்பு உண்டு. அதை உணர்ந்து அந்த வாய்ப்பை பயன்படுத்தக்கொண்டால், முதல்வர் ஆகலாம். இல்லையேல், வெற்றி வாய்ப்பு நழுவி செல்வதற்கு இவரும், இவரைச் சேர்ந்தவர்களும் காரணமாக இருக்கலாம்.

ஜோதிடர் முத்துப்பிள்ளை

பிறந்த தேதி: 25.08.1952,  லக்னம்: விருச்சகம், ராசி: துலாம், நட்சத்திரம்: சித்திரை 4-ம் பாதம்

தேர்தல் நடக்கும் காலத்தில் செவ்வாய், சனி லக்கினத்தில் கூடியிருப்பதால், அவரின் தேர்தல் செயல்பாடுகளில் பெரும் குழப்பம் நிகழும். இவரின் அரசியல் பேச்சுக்கள் புரிந்து கொள்ள முடியாமல் போனதற்கான காரணம், இரண்டுக்கு உடைய குரு, ஆறாம் வீடான எதிரி வீட்டில் இருப்பதே. இன்றும் அதே நிலைதான். இவர் பேசும் அரசியல் பேச்சுக்கள் குழப்பத்தையே வாக்காளர்களிடம் தரும். அதனால் வாக்குகளை இழக்கும் நிலை ஏற்படும்.
இவருடன் இணையும் அல்லது கூட்டணி வைக்கும் கட்சிகள் இவரை ஓரங்கட்டி பழிவாங்கவே துடிக்கும். இவரின் அரசியலில் தொடர்ந்து இந்நிலையே நீடிக்கும். எட்டுக்குடைய புதன் ஒன்பதில் அமர்ந்து திசாவை நடத்துவதால், அதனுடன் கேதுவும் இணைந்திருப்பதால் தற்காலத்தில் தேர்தலில் பெற்ற வெற்றியை அனுபவிக்கவே முடியாத சூழ்நிலையைத் தரும். அரசியலில் பிரகாசிக்கும் வாய்ப்பு மிகக்  குறைந்த அளவே உள்ளது. இவர் கூட்டணி கட்சிகளால் உயர்ந்த நிலையை அடைய இயலாது.


தே.மு.தி.க. ஜாதக அமைப்பு  


தேமுதிக ஜாதக கட்டம் 


பெயர்: தேமுதிக,  தொடங்கப்பட்ட நாள்: 14-9-2005 (புதன்), தமிழ் தேதி: 5107 (பார்திப) ஆவணி 29, நேரம்: காலை 09.32, நேர மண்டலம்: 05.30 க்ரீன்விச்சிற்கு கிழக்கே, இடம்: சென்னை,  நட்சத்திரம்-நட்சத்திர பாதம்: உத்திராடம்-2, ராசி-ராசி அதிபதி: மகரம்-சனி, லக்கினம்-லக்கினாதிபதி: துலாம்-சுக்கிரன், திதி: ஏகாதசி, சுக்ல பஷம் (வளர்பிறை)

தே.மு.தி.க கட்சியை செப்டம்பர் 14-ம் தேதி, 2005ம் ஆண்டு காலை 9.32 மணிக்கு, குரு ஹோரையில் துவங்கியுள்ளார்கள். கட்சியின் ஜாதகத்தைப் பார்க்கும் போது துலா லக்னம், மகர ராசியில் இந்தக் கட்சியை ஆரம்பித்துள்ளார்கள். கட்சி ஜாதகத்திற்கு, இப்போது குரு பலன் நன்றாக இல்லை. அதேப் போல் கட்சி ஜாதகத்திற்கு தற்சமயம் நடைப்பெற்று வருகின்ற திசையும் சரியில்லை. அதன் காரணமாக தற்சமயம் கட்சி ஜாதகத்திற்கு சிறப்பம்சம் ஏதும் இல்லை. ஆனால், எதிர்காலத்தில் இக்கட்சியின் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால், முதல்வர் பதவிக்கான சாத்தியக் கூறுகள் மட்டும், இந்த ஜாதக அமைப்பில் இல்லை.

ஜாதக கட்டங்களில் உள்ள அமைப்பு முறைகளை ஜோதிடம் ரீதியாக நாம் ஆராய்ந்தாலும்... மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். மக்களின் தீர்ப்பை காத்திருந்துதான் 

ad

ad