புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2016

நளினி மருத்துவமனையில் அனுமதி - இதய சிகிச்சைப்பிரிவில் பரிசோதனை



ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி உட்பட 4 பேர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நளினி மத்திய பெண்கள் தனிச்சிறையிலும், அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

 நீதிமன்ற உத்தரவுப்படி கணவன் – மனைவி இருவரும் 15 தினங்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசிக்கொள்வார்கள்.

 இந்நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் நளினி அப்பா இறந்ததை தொடர்ந்து 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டு இறுதி அஞ்சலிக்கு சென்று வந்தார். பின்னர் காரிய சடங்குக்காக நீதிமன்ற உத்தரவுப்படி ஒருநாள் பரோல் வழங்கப்பட்டு சென்றுவந்தார்.

 இந்நிலையில் திடீரென 17ந்தேதி காலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இருதய சிகிச்சைபிரிவில் பரிசோதனை நடக்கிறது. இதுப்பற்றி சிறைத்துறை மற்றும் மருத்துவ வட்டாரத்தில் விசாரித்தபோது, அவர் நரம்பு மற்றும் இதயம் சம்மந்தமான சிகிச்சைக்காகஅழைத்து வரப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி, சிகிச்சை அளிக்கிறார்கள் என்றனர்.

திடீரென நளினி மருத்துவமனை அழைத்துசெல்லப்பட்டது சிறைத்துறை மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இடையே பதட்டத்தை ஏற்படுத்திவிட்டது. ஏற்கனவே சிறுநீர் தொற்று பிரச்சனை காரணமாக இதே வழக்கில்சிறையில் உள்ள பேரறிவாளன் மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று சிகிச்சைக்காக சென்று வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

ad

ad