புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

23 மார்., 2016

நாட்டாமை தீர்ப்பை மாத்திட்டாரு... அதிமுக கூட்டணியில் சமக: ஜெ.வை சந்தித்தப் பின் சரத்குமார் பேட்டி
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று
சென்றார். அங்கு அவர் ஜெயலலிதாவை சந்தித்தார்.

இச்சந்திப்பிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி உள்ளது. எத்தனைத் தொகுதிகளில் போட்டி என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றார். 

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்தீர்களே என்ற கேள்விக்கு, கட்சியை வளர்ப்பதற்கு அதிமுகவில் சேருவதுதான் சிறந்த முடிவு என்றார். 

2011 தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சிக்கு தென்காசி, நாங்குநேரி என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில்  தென்காசி தொகுதியில் சரத்குமாரும், நான்குநேரி தொகுதியில் எர்ணாவூர் நாராயணனும் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 

கடந்த மாதம் அதிமுக தலைமையை விமர்சித்துவிட்டு, கூட்டணியில் இருந்து பிரிவதாகவும், பாஜக கூட்டணியில் இடம்பெறப்போவதாகவும் தெரிவித்திருந்தார் சரத்குமார். அப்போது எர்ணாவூர் நாராயணனுக்கும், சரத்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சமத்துவ மக்கள் கழகம் என தனிக் கட்சி தொடங்கினார் எர்ணாவூர் நாராயணன். தனிக் கட்சி தொடங்கியவுடன், போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் சரத்குமாரும் திடீரென இன்று ஜெ.வை சந்தித்து பேசியுள்ளார். 

அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இன்று நேரில் சந்தித்த சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார், நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.