புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2016

லண்டனில் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவித்தியாவுக்கு உதவ பல தமிழர்கள் அணிவகுப்பு

]



லண்டனில் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளமருத்துவக் கல்லூரி மாணவியான வித்தியாவுக்கு உதவ பல தமிழர்கள் முன் வந்துள்ளார்கள் என்பது தான் நம்பிக்கை தரும் செய்தியாக உள்ளது. முதலில் இச்செய்தியை வெளியிட்ட அனைத்து ஊடகங்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது. பல நூறு தமிழர்கள் நேற்றைய தினம்(சனிக்கிழமை) சென்று தமது DNA மாதிரியைக் கொடுத்துள்ளார்கள். அவர்கள் வியந்து போன விடையம் என்னவென்றால், அவர்களின் எச்சிலை மட்டும் தொட்டு எடுத்து அதில் இருந்து தான் டி.என். ஏ யை மருத்துவர்கள் கண்டறிவார்கள் என்பது பலருக்கு தெரியாத விடையம். மேலும் பல தமிழர்கள் ரத்தம் குத்தி எடுப்பார்கள் என்று பயந்து போய் இருந்திருக்கலாம். ஆனால் வாயில் உமிழும் எச்சிலை எடுத்தே, மருத்துவர்கள் டி.என்.ஏ கண்டறிகிறார்கள். அது பொருந்தும் என்று தெரிந்தால் , பின்னர் அவர்களின் ஸ்டெம் செல்லை எடுக்கிறார்கள். அவ்வளவு தான்.
லண்டனில் உள்ள பல தமிழர்கள் தமது டி.என்.ஏ மாதிரியைக் கொடுத்திருந்தாலும் , பல ஆயிரக்கணக்கானவர்களை பரிசோதனை செய்யும் பட்சத்தில் தான் , அதில் இருந்து ஒருவரின் ரத்தமாதிரி வித்தியாவுக்கு பொருந்தும். அந்த சரியான நபரைக் கண்டு பிடிப்பது , தாம் மிகவும் கஷ்டமான விடையம். எனவே தமிழர்களே இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் மாலை 6.00 மணிவரை சவுத்ஹால் பகுதியில் உள்ள Church ஒன்றிலும் இந்த பரிசோதனைகள் இடம்பெற உள்ளது. எனவே இதுவரை செல்லாதவர்கள் தயவுசெய்து சென்று, உங்கள் டி.என்.ஏ மாதிரியைக் கொடுங்கள். உங்களில் ஒருவர் நிச்சயம் வித்தியாவின் உயிரை காப்பாற்ற முடியும். தமிழர்களின் ஒற்றுமை பிரித்தானியாவில் ஏற்கனவே அவதானிக்கப்பட்ட ஒரு விடையம். வித்தியாவுக்காக ஏற்கனவே பல நூறு தமிழர்கள் நேற்றைய தினம் திரண்டவேளை , அதனை பார்த்த வெள்ளை இன மக்களே ஒரு முறை அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.
அதுபோக தனது டி.என்.ஏ மாதிரியைக் கொடுக்க வந்திருந்த , அனைத்து தமிழர்களின் கரங்களையும் பற்றி தனது பிள்ளையைக் காப்பாற்றுமாறு வித்தியாவின் அப்பா கேட்டுக் கொண்ட விதம் பலரது கண்களை ஈரமாக்கியது. வந்து தனது டி.என்.ஏ மாதிரியைக் கொடுத்த தமிழர்கள் , தமது மனிதாபிமானத்தை , தமிழர் என்ற உணர்வை மீண்டும் ஒரு முறை நிரூபித்துச் சென்றுள்ளார்கள். ஒரு தமிழருக்கு ஆபத்து என்றாலும் நாம் ஒன்றாக கைகொடுப்போம் என்று மீண்டும் ஒரு முறை தமிழர்கள் நிரூபித்து வருகிறார்கள். ஏற்கனவே பலர் சென்றுவிட்டார்களே நாம் இனி ஏன் செல்லவேண்டும் ? என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம். ஏன் என்றால் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல பல்லாயிரக் கணக்கானவர்களில் ஒருவருடைய டி.என்.ஏ மாதிரி தான் வித்தியாவுக்குப் பொருந்தும் என்பதனை மறந்துவிடவேண்டாம். எனவே ஒவ்வொரு தமிழர்களும் இன்று செல்லவேண்டும்.
St. Anselms Catholic Church
The Rectory
The Green
SOUTHALL
UB2 4BE
லண்டனில் உள்ள பல இளையோர்கள் , வித்தியாவுக்கு உதவ தாமாகவே முன் வந்து இரவு பகல் பாராது செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் நன்றி கூறாமல், இருக்கவே முடியாது. ஒட்டு மொத்த தமிழர்களும் திரண்டு வித்தியா உயிரைக் காப்பாற்றவேண்டும்
St. Anselms Catholic Church 
The Rectory 
The Green 
SOUTHALL 
UB2 4BE
லண்டனில் உள்ள பல இளையோர்கள் , வித்தியாவுக்கு உதவ தாமாகவே முன் வந்து இரவு பகல் பாராது செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் நன்றி கூறாமல், இருக்கவே முடியாது. ஒட்டு மொத்த தமிழர்களும் திரண்டு வித்தியா உயிரைக் காப்பாற்றவேண்டும் 

ad

ad