புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2016

ஆசியக்கிண்ணம் யாருக்கு? இறுதிப்போட்டியில் இந்தியா- வங்கதேசம் இன்று பலப்பரீட்சை


ஆசியக்கிண்ண டி20 தொடரில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த தொடரில் தொடர் வெற்றிகளால் டோனி தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணியில் வலுவான துடுப்பாட்ட வரிசை உள்ளது.
அதேபோல் பந்துவீச்சிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால் இன்றைப் போட்டியிலும் இந்திய அணியின் ஆதிக்கம் காணப்படலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்ட ஆசிஷ் நெஹ்ரா, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா இறுதிப்போட்டிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துடுப்பாட்டத்தை பொறுத்தவரை விராட் கோஹ்லி மிகவும் நிலையாக விளையாடி வருகிறார். ரோஹித் சர்மா, தவான், ரெய்னா போன்ற அதிரடி வீரர்கள் நல்ல நிலையில் உள்ளார்.
மேலும், ’சிக்சர் மன்னன்’ யுவராஜ்சிங் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமாகும்.
ஆசியக்கிண்ண ஒருநாள் போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ள இந்தியா முதன்முறையாக நடைபெறும் டி20 ஆட்டத்திலும் கிண்ணத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
அதே சமயம் தற்போது உள்ள நிலைமையில் வங்கதேச அணியை இந்தியா குறைத்து எடைபோடாது. சமீப காலமாக வங்கதேச அணி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
அதிலும் சொந்த மண்ணில் அந்த அணி வீரர்கள் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தானை இந்த தொடரில் வென்று இருந்தது.
மேலும், அந்த அணிக்கு எதிராக இந்திய அணி கடந்த காலங்களில் வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரில் தோற்று இருந்தது. அதனால் இந்திய அணிக்கு கண்டிப்பாக வங்கதேசம் நெருக்கடி கொடுக்கும்.
வங்கதேச அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கூடுதல் பலம். அந்த அணியில் துடுப்பாட்டத்தில் சபீர் ரகுமான் சிறப்பாக உள்ளார். அவர் இலங்கைக்கு எதிராக 80 ஓட்டங்கள் எடுத்து முத்திரை பதித்தார்.
இதுதவிர முஸ்பிகுர் ரகீம், சகீப்–அல்–ஹசன், மகமதுல்லா, அணித்தலைவர் மொர்டசா போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.
இரு அணிகளும் இன்று உச்சகட்ட மோதலில் ஈடுபடும் என்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ad

ad