புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2016

திமுக-133; அதிமுக- 75; பாமக- 1; தேமுதிக-1; 24 ல்- இழுபறி- அன்புமணி, திருமா தோல்வி

சட்டசபை தேர்தலில் திமுக 133 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றும் என்று நக்கீரன் பத்திரிகை கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
அதிமுகவுக்கு 75 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது நக்கீரன் சர்வே. தேர்தலையொட்டி டிவி சேனல்களும் பத்திரிகைகளும் தொடர்ந்து கருத்து கணிப்பை வெளியிட்டு வருகின்றன.
ஊடகங்கள் சில திமுக ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் அதிமுக ஆட்சியை தக்க வைக்கும் என்றும் குழப்பமான கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தற்போது நக்கீரன் பத்திரிகையும் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு 200 பேர் வீதம் 234 தொகுதியில் 46,800 வாக்காளர்களிடம் நக்கீரன் இந்த கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளது.
ஆட்சி மாற்றம்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று 61% பேரும் வேண்டாம் என்று 39% பேரும் வாக்களித்துள்ளனர்.
யார் முதல்வர்?
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு கருணாநிதி- 24.03%; ஜெயலலிதா- 22.05%; விஜயகாந்த்- 7%; அன்புமணி- 4% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வெல்லும் தலைவர்கள்
மேலும் திருவாரூரில் கருணாநிதி, ஆர்.கே.நகரில் ஜெயலலிதா, உளுந்தூர்ப்பேட்டையில் விஜயகாந்த் ஆகியோருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
அன்புமணி, திருமாவளவன்
3-வது இடம் பென்னாகரத்தில் அன்புமணி ராமதாஸும், காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவனும் 3-வது இடத்தைத்தான் பிடிப்பர் என்கிறது நக்கீரன் சர்வே.ராஜினாமா செய்ய பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் (அமல் எம்.பி) முடிவு

ad

ad