புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2016

ஏட்டுகளின் செக்ஸ் தொல்லையால் பெண் போலீஸ் தற்கொலை: பரபரப்பு கடிதம் சிக்கியது


தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து வந்த காயத்ரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  தாராபுரம் டி.எஸ்.பி. ஜெரீனா பேகத்தின் உதவியாளராக பணியில் இருந்த போது உயிரை மாய்த்துக் கொண்டார்.

காயத்ரி தற்கொலைக்கு டி.எஸ்.பி. ஜெரீனாபேகம் அவமானமாக திட்டியதே காரணம் என கூறப்பட்டது.  இதுகுறித்து காயத்ரியின் கணவர் ஆறுமுகமும் குற்றம் சுமத்தி இருந்தார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் பெண் போலீஸ் காயத்ரி, தான் தற்கொலை செய்வதற்கு முன்னர், தனது தோழி ஒருவர் மூலமாக டி.எஸ்.பி. ஜெரீனா பேகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் 2 போலீஸ் ஏட்டுக்கள் செக்ஸ் தொல்லை கொடுத்ததாலேயே தான் தற்கொலை செய்து கொண்டதாக திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளார்.

தாராபுரம் போலீஸ் வட்டாரத்தில் இந்த விவகாரம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. காயத்ரி எழுதி இருக்கும் கடிதத்தில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-

3 மாதத்துக்கு முன்னால் நான் பணக்கஷ்டத்தில் இருந்த போது, ஏட்டையா ஒருவரிடம் (அவரது பெயரை குறிப்பிட்டுள்ளார்) வட்டிக்கு ரூ.5 ஆயிரம் பணம் வாங்கினேன்.  அந்த பணத்தை என்னால் திருப்பி கொடுக்க முடியவில்லை.

ஒரு நாள் கோர்ட்டு அருகில் வைத்து என்னிடம் பேசிய அவர், பணம் எல்லாம் வேண்டாம், ஒரு நாள் என்னோடு இரு என்று கூறினார். இதன் பின்னர் வேறு ஒரு நாள் குடிபோதையில் என்னை பலவந்தப்படுத்தி கெடுத்து விட்டார்.

இதன் பின்னர் அலங்கியம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் இன்னொரு போலீஸ் ஏட்டுவின் பெயரை சொல்லி அவருடன் சென்றால் ஒவ்வொரு மாதமும் ரூ. 5 ஆயிரம் தருவதாக கூறுகிறார் என தெரிவித்தார். அவரது பேச்சை கேட்டு அலங்கியம் போலீஸ் ஏட்டுவும் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார். என்னுடன் உல்லாசம் அனுபவிக்க முயற்சி செய்தார். எனது சாவுக்கு போலீஸ் ஏட்டுகள் இருவருமே காரணம் என்று காயத்ரி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது

ad

ad