புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2016

தேர்தலில் உருண்ட பெரும்தலைகள்,திருமா பரிதாப தோல்வி

ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் தேமுதிக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தோல்வியடைந்தார்.
அவர் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசைவிட 7794 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்தார்.சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட விருகம்பாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது.
அதிமுக வேட்பாளர் வி.என். ரவி விருகம்பாக்கத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை துவக்கம் முதலே பின்தங்கியிருந்தார். இறுதியாக அவர் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் தேமுதிக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தோல்வியடைந்தார்.
அவர் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசைவிட 7794 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்தார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வியாழக்கிழமை (மே 19) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில்
தோல்வி அடைந்துள்ளார். அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 48,450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தனித் தொகுதிகளில் காட்டுமன்னார்கோவில் தொகுதியும் ஒன்று. 1962-ஆம் ஆண்டு காட்டுமன்னார்கோவில் தொகுதி உருவானது. பொதுத் தொகுதியாக இருந்த இந்த தொகுதி 1967-ஆம் ஆண்டு தனித் தொகுதியானது.சென்னையின் முக்கிய தொகுதியான அண்ணாநகரில் திமுக வேட்பாளர் எம்.கே. மோகன் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் செல்கிறார்.
வேட்பாளர்களிலேயே கோடீஸ்வர வேட்பாளராகக் கருதப்பட்ட எம்.கே. மோகன், அமைச்சர் கோகுல இந்திராவை 7,050 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
அண்ணாநகர் தொகுதி இதுவரை 9 தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இதில் 7 முறை திமுகவும், காங்கிரஸ், அதிமுக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1977, 1980 தேர்தல்களில் திமுக தலைவர் கருணாநிதியும், 1984-ல் எஸ்.எம். ராமச்சந்திரனும், 1989-ல் க.அன்பழகனும், 1996, 2001, 2006 தேர்தல்களில் தொடர்ச்சியாக மூன்று முறை ஆற்காடு வீராசாமியும் இந்தத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இந்தத் தொகுதியில் 2011-ஆம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக அதிமுகவின் எஸ்.கோகுல இந்திரா வெற்றி பெற்று அமைச்சரானார். ஆனால், அவருக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பை அளிக்க அண்ணாநகர் தொகுதி மக்கள் மறுத்துவிட்டனர். கைவிரித்துவிட்டனர்.

ad

ad