புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2016

5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் சீமான்!

கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டார். அதேபோல், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களையும் முதன்முதலாக அறிவித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரங்களை அவர் மேற்கொண்டார்.
சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க வேட்பாளராக எம்.சி.சம்பத்தும், தி.மு.க வேட்பாளராக இள.புகழந்தியும், த.மா.கா வேட்பாளராக சந்திரசேகரும், பா.ம.க வேட்பாளராக தாமரைக்கண்ணனும் களமிறங்கினர்.
கடலூர் தொகுதியின் தேர்தல் முடிவுகள் இன்று (19-ம் தேதி) மாலை அறிவிக்கப்பட்டது. இதில், எம்.சி.சம்பத் (அ.தி.மு.க) 70922 வாக்குகளும், இள.புகழேந்தி (தி.மு.க) 46509 வாக்குகளும், சந்திரசேகர் (த.மா.கா) 20608 வாக்குகளும், தாமரைக்கண்ணன் (பா.ம.க) 16905 வாக்குகளும், சீமான் (நாம் தமிழர் கட்சி) 12497 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற முழக்கத்தோடு தேர்தலில் களமிறங்கிய சீமான், தேர்தல் முடிவின்படி தோல்வியடைந்ததோடு, 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

ad

ad