புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2016

கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலை புலி போராளிகளுக்கு மீண்டும் புனர்வாழ்வு!

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீண்டும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
ராம், நகுலன் மற்றம் தயாளன் ஆகிய விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் கடந்த வாரமளவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த மூவரும், முறையாக புனர்வாழ்வு பெறாத நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த மூவரையும், மீண்டும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விடுதலைப்புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பிரபா என்றழைக்கப்படும் கலைநேசன் நேற்று காலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், மேலதிக விசாரணைகளுக்காக, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பு அலுவலகத்துக்குக் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டுக்கு வருகை தந்திருந்த பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர், தனது கணவரை கைது செய்து அழைத்துச் சென்றதாக, கலைநேசன் மனைவி கயல்விழி தெரிவித்திருந்தார்.
அத்துடன், இது குறித்து மட்டக்களப்பு மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad