இதுதொடர்பாக அக் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் மே 16-ஆம் தேதி வரையிலான காலத்தை கருத்துக்கணிப்புகளை நடத்தவோ அல்லது அதை ஊடங்கள் மூலமாக வெளியிடவோ தடைசெய்யப்பட வேண்டிய கால அளவாக அறிவித்துள்ளது.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை மீறி வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்பு நடைபெற்று வருகிறது. சில ஊடகங்கள் இந்த கருத்துக் கணிப்புகளை வெளியிட்டும் வருகின்றன.
தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து சார்பற்ற நடுநிலையோடு செயல்பட வேண்டிய தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் அமைதி காத்து வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.