புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2016

கிளிநொச்சியில் 2620 மாற்றுவலுவுள்ளோர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2620 மாற்றுவலுவுள்ளோர் உள்ள நிலையில் 1539 பேர் யுத்தம் காரணமாக மாற்றுவலுவுள்ளோராக ஆக்கப்பட்டவர்கள்
என கிளிநொச்சி மாவட்ட புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் 2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணிப்பின் அடிப்படையில் 2620 பேர் மாற்றுவலுவுள்ளோராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவற்றில் யுத்தம் காரணமாக மாற்றுவலுவுள்ளேராக ஆக்கப்பட்டவர்கள் 1539 பேரும், பிறப்பின் காரணமாக 560 பேரும், நோய் காரணமாக 250 பேரும், விபத்தினால் 119 பேரும், இயற்கை அனர்த்தங்களால் 152 பேரும், உள்ளடங்குகின்றனர்.

இவர்களில் கால் ஒன்றை இழந்தவர்கள் 469 பேரும், இரண்டு கால்களை இழந்தவர்கள் 24 பேரும், கை ஒன்றை இழந்தவர்கள் 211 பேரும், இரண்டு கையை இழந்தவர்கள் 21 பேரும், கண் ஒன்றை இழந்தவர்கள் 239 பேரும், இரண்டு கண்களை இழந்தவர்கள் 43 பேரும், முழுமையான மாற்றுவலுவுள்ளோர்கள் 63 பேரும் காணப்படுகின்றனர்.

கரைச்சி பிரதேசத்தில் 1177 பேரும், கண்டாவளையில் 596 பேரும், பூநகரியில் 441 பேரும், பச்சிலைப்பள்ளியில் 406 பேரும் உள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad