புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 ஜூன், 2016

நத்தம் ஆர்.விஸ்வநாதனின் கட்சி பதவி பறிப்பு


அதிமுக மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் இருந்து சிலரை விடுவித்தும், புதிதாக அப்பொறுப்புக்கு நியமித்தும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஈரோடு புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து தோப்பு என்.டி.வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்புக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்ட கழகச் செயலாளராக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.முருகையா பாண்டியன் எம்எல்ஏ விடுவிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் கழக அமைப்பு செயலாளர் பி.நாராயண பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருந்து முத்துக்கருப்பன் எம்.பி. விடுவிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் பாப்புலர் வி.முத்தையா நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசளை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஹரிஹரசிவகங்கர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து நத்தம் ஆர்.விஸ்வநாதன், நத்தம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்.கண்ணன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் மருதராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.தர்மர் விடுவிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்.தளவாய் சுந்தரம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் விஜயகுமார் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். 

வடசென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து கே.எஸ்.சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் முன்னாள் வாரிய தலைவர் நா.பாலகங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து தி.நகர் பி.சத்தியா எம்எல்ஏ விடுவிக்கப்பட்டு, அப்பொறுப்பில் தி.நகர் முன்னாள் எம்எல்ஏ வி.பி. கலைராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் திருக்கழுக்குன்றம் ஒன்றியக் கழகச் செயலாளர் எஸ்.ஆறுமுகமும், சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக மாவட்ட ஜெ. ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

விழுப்புரம் மாவட்ட தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து கதிர்தண்டபாணி விடுவிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் இரா.குமரகுரு எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தெற்கு மாவட்ட விவசயாப் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து பா.அய்யம்பெருமாள் விடுவிக்கப்பட்டு, அப்பொறுப்பில் கதிர்தண்டபாணி நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் பொறுப்பில் பா.அய்யம்பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். 

திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து முக்கூர் என்.சுப்பிரமணியன் விடுவிக்கப்பட்டு, அப்பொறுப்பில் தூசி கே.மோகன் எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார். 

வேலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து வி.ராமு விடுவிக்கப்பட்டு, அப்பொறுப்பில் சோளிங்கர் தொகுதி எம்எல்ஏ என்.ஜி.பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்து வி.பாலசுந்தரம் விடுவிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் சுமைதாங்கி சி.ஏழுமலை நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளராக பாலசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.