புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2016

தமிழக மீனவர்கள் கடத்தலா? ஜெயலலிதாவின் கூற்றை மறுக்கிறது கடற்படை

தமிழக மீனவர்கள் கடத்திச் செல்லப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா முன்வைத்துள்ள குற்றச்சாட்டை இலங்கை கடற்படை முற்றாக மறுத்துள்ளது.

இலங்கை  கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வதாக ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

கடந்த 5ஆம் திகதி தமிழக மீனவர்கள் நால்வர் இலங்கை  கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பிலேயே ஜெயலலிதா இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

கடந்த மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் இதுவரை தமிழக மீனவர்கள் 15 பேர் இலங்கை  சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு 91 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பல தடவைகளாக இது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட போதும் இலங்கை  கடற்படையினர் தமிழக மீனவர்களை கடத்திச் செல்லும் நடவடிக்கைகள் தொடர்வதாக ஜெயலலிதா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்தப் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜெயலலிதா முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக இலங்கை  கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவிக்கையில்

இலங்கை  எல்லைக்குள் வரும் எந்தவொரு வெளிநாட்டு மீனவர்களையும் கைது செய்வதற்கான அதிகாரம் இலங்கை  கடற்படைக்கு உள்ளதென சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச கடல் எல்லைச் சட்டத்திற்கு உட்பட்டே தமிழக மீனவர்களும் கைது செய்யப்படுவதாகவும், மாறாக அவர்கள் கடத்தப்படவில்லை என்றும் கப்டன் அக்ரம் அலவி தெளிவுபடுத்தினார்

ad

ad