புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2016

சென்னை: முதல் கணவர் தொடுத்த வழக்கில் ஆஜரானபோது, 2வது கணவரும் வழக்கு தொடர்ந்தார்: நடிகை அதிர்ச்சி


தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வருபவர் 33 வயதான நடிகை சுபஸ்ரீ. கடந்த 2007ம் ஆண்டு சென்னை தாம்பரத்தில் இவருக்கும் மன்னார்குடியை சேர்ந்த என்ஜினீயர் சரவணனுக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் சுபஸ்ரீக்கும், சரவணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சரவணன் மீது தாம்பரம் மகளிர் போலீசில் சுபஸ்ரீ வரதட்சணை புகார் அளித்தார். சரவணன் உடனடியாக எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தனது மனைவி சுபஸ்ரீ அவருடைய குடும்பத்தினருடன் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியதோடு, என் மீது தாம்பரம் மகளிர் போலீஸ்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை திரும்ப பெறுவதற்கு பணம் தர வேண்டும் என்று மிரட்டுகிறார். எனக்கு தெரியாமல் மாதவரத்தை சேர்ந்த சீனிவாசனை திருமணம் செய்துவிட்டார். இது இந்து திருமண சட்டத்துக்கு எதிரானது. எனவே சுபஸ்ரீ மீது நடவடிக்கை எடுக்கமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

சரவணன் தாக்கல் செய்திருந்த மனு 13வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கோபிநாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு நடிகை சுபஸ்ரீயை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உத்தரவிட்டார். பல முறை சம்மன் அனுப்பியும் சுபஸ்ரீ கோர்ட்டில் ஆஜராகமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. சரவணன் தரப்பில் வக்கீல் மணிகண்டன் ஆஜரானார். அப்போது சுபஸ்ரீ கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.

தனக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெறுமாறு சுபஸ்ரீ மனுத்தாக்கல் செய்தார். இதனை கோர்ட்டு ஏற்றுக்கொண்டு வருகிற ஜூலை 5ந் தேதி நேரில் ஆஜராகும்படி சுபஸ்ரீக்கு உத்தரவிட்டது.

இதற்கிடையில் தன்னையும் நடிகை சுபஸ்ரீ மோசடி செய்துவிட்டார் என்று அவருடைய 2வது கணவர் சீனிவாசன் நேற்று எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

ad

ad