புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 ஜூன், 2016

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது - தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாவட்ட
வாரியாக இதற்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மண்டலத்தில் 58 மதுபானக் கடைகளும், கோவை மண்டலத்தில் 60 மதுபானக் கடைகளும், மதுரை மண்டலத்தில் 201 மதுபானக் கடைகளும், திருச்சி மண்டலத்தில் 133 மதுபானக் கடைகளும், சேலம் மண்டலத்தில் 48 மதுபானக் கடைகளும் மூடப்படுகின்றன. மூடப்படும் இந்த 500 மதுபான கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.