ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். குடாநாட்டிற்கு விஜயம் செய்யவிருக்கும் நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை சனிக்கிழமை திறந்து வைக்கவுள்ளார்.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்காவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர யாழ்ப்பாணத்திற்கு நேற்று வியாழக்கிழமை விஜயம் செய்துள்ளார்.
ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக யாழ். மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு தரப்பு உயரதிகாரிகளுடன் பொலிஸ்மா அதிபர் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.