புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2016

அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார் சசிகலா

அதிமுகவில் சசிகலா மீண்டும் அதிகார மையத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தஞ்சாவூர் தொகுதியில்
அவர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியதால் தஞ்சாவூர் தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தஞ்சாவூரில் தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் அந்த தொகுதியில் சசிகலா போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அவர் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்பட்ட நிலையில் வைத்திலிங்கம் நிறுத்தப்பட்டார்.
ஆனால் அவர் தோல்வியை தழுவினர். இந்நிலையில் தஞ்சாவூரில் சசிகலா களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இப்படி பேசப்படுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பிரதமரை சந்திக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற ஜெயலலிதா, தன்னுடன் சசிகலாவையும் அழைத்துச் சென்றார் இதுதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிமுகவில் சசிகலா அதிகார சக்தி என்பதை டெல்லிக்கும் உணர்த்தவே சசிகலாவை ஜெயலலிதா அழைத்துச் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
சசிகலாவிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் அவரை அதிகார மையத்தில் முக்கிய இடத்திற்கு கொண்டுவர நடைபெறும் முயற்சியே இது என்று கூறப்படுகிறது.

ad

ad