புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2016

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் விடுதலை

வவுனியா புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வந்த ஐந்து முன்னாள் போராளிகள் நேற்று(புதன்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர்.கமிடோன் தலமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. சிறப்பு அதிதியாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜெ.ஏ.ரத்நாயக்கா கலந்துகொண்டார்..

இதன்போது வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற பயிலுனர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்வைத்தொடர்ந்து 25 பயிலுனர்களுக்கு தச்சுத் தொழிலுக்கான உபகரணங்கள் புனர்வாழ்வு ஆணையாளரால் வழங்கி வைக்கப்பட்டது.

விசேடமாக இறுதியுத்தத்தில் காயமடைந்ததன் காரணமாக நடமாடமுடியாத நிலையிலுள்ள முன்னாள் போராளி ஒருவருக்கும் தச்சுத் தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

 இந்த நிகழ்வில் சர்வ மத தலைவர்கள், வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் உதவிப் பணிப்பாளர் பிரிகேடியர் தர்சன லியனகே, கேணல் சித்திர குணதுங்க, கடற்படை அதிகாரிகள், வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர் எஸ் சந்திரகுமார், புனர்வாழ்வு பெற்றுவரும் பயிலுனர்கள், விடுதலை செய்யப்பட்ட போராளிகளின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ad

ad