புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2016

ஐரோப்பிய கால்பந்து போட்டி: பெல்ஜியத்தை பதம் பார்த்தது இத்தாலி

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணியை பதம் பார்த்த இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


ஐரோப்பிய கால்பந்து

15-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ-2016) பிரான்சில் நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் 16 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு லைன் நகரில் ‘இ’ பிரிவில் அரங்கேறிய லீக் ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் இத்தாலியும், பெல்ஜியமும் எதிர்கொண்டன. இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை கையாண்டன. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் (56 சதவீதம்), கடத்தி கொடுப்பத்திலும், நிறைய ஷாட்டுகளை அடிக்க முயற்சிப்பதிலும் (18 முறை) பெல்ஜியமே சற்று ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் இத்தாலியின் வலுவான தடுப்பு அரணை அவர்களால் உடைக்க முடியவில்லை.

இத்தாலி வெற்றி

அதே சமயம் நேர்த்தியான செயல்பாட்டில் பெல்ஜியத்தை இத்தாலி மிஞ்சியது என்று தான் சொல்ல வேண்டும். 32-வது நிமிடத்தில் இத்தாலி முதலாவது கோலை திணித்தது. லியோனர்டோ போனுச்சி சரியாக மைதானத்தின் நடுப்பகுதியில் இருந்து தூக்கி அடித்த பந்தை இத்தாலி வீரர் ஜியாச்செரினி, பெல்ஜியத்தின் முன்கள வீரர் டோபி ஆல்டெர்வைரல்டு மற்றும் கோல் கீப்பர் கோர்டோய்ஸ் ஆகியோரை ஏமாற்றி கோலுக்குள் திருப்பினார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு ஜியாச்செரினி போட்ட முதல் சர்வதேச கோல் இதுவாகும். இதன் பிறகு அடுத்த ஒரு மணி நேரம் இடைவெளியில் கடைசி நிமிடத்தில் இன்னொரு கோல் விழுந்தது.

இத்தாலி வீரர் ஆன்டோனியா கன்ட்ரிவா கோல் கம்பம் அருகில் ஓடி வந்த போது அவரது வசம் பந்து சென்றது. ஆனால் பந்தை தடுக்கும் தூரத்தில் பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்டோய்ஸ் நின்றதால், சுதாரித்து கொண்ட கன்ட்ரிவா மின்னல் வேகத்தில் சக வீரர் கிராஜியானோ பெல்லே பக்கம் பந்தை தட்டி விட்டார். பெல்லே பந்தை சூப்பராக கோலுக்குள் அடித்து அமர்க்களப்படுத்தினார். முடிவில் இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை தோற்கடித்தது. சவால் மிக்க போட்டிகளில் (நட்புறவு ஆட்டத்தை தவிர்த்து) 34 ஆண்டுகளாக பெல்ஜியத்திடம் தோற்றதில்லை என்ற பெருமையையும் இத்தாலி தக்க வைத்துக் கொண்டது.

பயிற்சியாளர் பெருமிதம்

தோல்விக்கு பிறகு பெல்ஜியம் கோல் கீப்பர் திபாவ்ட் கோர்டோய்ஸ் கூறும் போது, ‘ஒருங்கிணைந்து ஆடுவதிலும், யுக்திகளை திறம்பட கையாள்வதிலும் எங்களை விட இத்தாலி அணி மிகச்சிறப்பாக செயல்பட்டது. அடுத்த சுற்றுக்கு முன்னேற எஞ்சிய இரு ஆட்டங்களிலும் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டும்’ என்றார்.

இத்தாலி தலைமை பயிற்சியாளர் ஆன்டோனியோ கோன்ட் கூறும் போது, ‘கடந்த சில ஆண்டுகளாக பெல்ஜியம் கால்பந்தில் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. அந்த அணியில் சில திறமைமிக்க வீரர்கள் இருக்கிறார்கள். கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் பெல்ஜியமும் ஒன்று என்று நான் மீண்டும் சொல்கிறேன். இந்த ஆட்டத்திற்கு நாங்கள் உண்மையிலேயே மிக நன்றாக தயாராகி இருந்தோம். எங்கள் மீதான விமர்சனங்கள் அனைத்தும் தவறு என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறோம். இந்த வெற்றி மிகுந்த திருப்தி அளிக்கிறது’ என்றார்.

மற்றொரு ஆட்டம்

முன்னதாக இதே பிரிவில் நடந்த சுவீடன்-அயர்லாந்து இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. அயர்லாந்து அணியில் வெஸ் ஹூலஹன் 48-வது நிமிடத்தில் கோல் அடித்தார். 71-வது நிமிடத்தில் அயர்லாந்தின் சியாரன் கிளார்க் அடித்த சுயகோல் மூலம் சுவீடன் அணி தோல்வியில் இருந்து தப்பித்தது.

இன்றைய ஆட்டங்களில் ரஷியா-சுலோவக்கியா (மாலை3 மணி), ருமேனியா-சுவிட்சர்லாந்து (6மணி), பிரான்ஸ்-அல்பேனியா (9 மணி) அணிகள் மோதுகின்றன. 

ad

ad