புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2016

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பேன் – ரொசீனா அலின்-கான்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பிரித்தானிய நாடாளுமன்றம் சென்று குரல்கொடுப்பதற்கு தொழிற்கட்சியின் ரூட்டிங்
தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் மருத்துவர் ரொசீனா அலின்-கான் (Rosena Allin-Khan) உறுதியளித்துள்ளார்.
பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றான ரூட்டிங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இதுவரை காலமும் விளங்கிய ஈழத்தமிழர்களின் நீண்ட கால நண்பரான சடீக் கான் கடந்த மாதம் இலண்டன் மாநகர முதல்வராகப் பதவியேற்றதை அடுத்து அவரது நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியது.
இதன் விளைவாக வரும் நாளை (16.06.2016) ரூட்டிங் தொகுதியில் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தொழிற்கட்சியின் சார்பில் களமிறங்கும் மருத்துவர் ரொசீனா அலின்-கான், தமிழ் மக்களின் நண்பர்களில் ஒருவராவார்.
சடீக் கானைப் போன்று தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தான் குரல் கொடுக்கப் போவதாகத் தமிழ் மக்களுக்கான பிரத்தியேக காணொளி ஒன்றின் மூலம் அலின்-கான் அவர்கள் உறுதியளித்துள்ளார்.
இவருக்கு ஆதரவாக தமிழ் மக்களின் நீண்ட கால நண்பரான மிச்சம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றார்.
ரூட்டிங் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெறும் இடைத்தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவுடன் அலின்-கான் அவர்கள் ஈட்டப் போகும் வெற்றி, பிரித்தானிய நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வரும் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad