புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2016

கடவுச்சீட்டு தொலைந்ததால் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இன்னல்

கனடா- விடுமுறைக்கு அரிசோனா சென்ற கீதை தர்மசீலன் குடும்பத்தினர் தங்கியிருந்த ஹொட்டேலில் கடவு சீட்டுக்கள் களவாடப்பட்டு விட்டது.
இது குறித்து எயர் கனடாவிடம் தெரிவித்த போது திரும்பி செல்வதற்கான ரிக்கெட்டுக்கள் போதுமென அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
திரும்பும் போது அவர்களிற்கு காத்திருந்த சோதனை குறித்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கவில்லை.
நால்வர் அடங்கிய குடும்பம் பீனிக்ஸ் விமான நிலைய பாதுகாப்பு பகுதியை கடந்து விட்டனர்.ஆனால் ஏர் கனடா முகவர் இவர்களிடம் போர்டிங் பாசை கையளிக்க சிறிது முன்னர் மற்றொரு முகவர் இவர்களை அணுகி கடவு சீட்டுக்கள் இன்றி கனடிய சட்டத்தின் பிரகாரம் திரும்ப ரொறொன்ரோ செல்வது குற்றமாகும் என தெரிவித்துள்ளார்.
யு.எஸ் சுங்க மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இவர்களை அனுமதித்து விட்ட பின்னரும் இவர்கள் அனுமதிக்கவில்லை என கீதை ரொறொன்ரோ பத்திரிகையாளரிடம் தெரிவித்தார்.
தொலைந்த கடவுச்சீட்டு சம்பந்தப்பட்ட விடயங்களில் எயர் கனடாவின் மாறுபட்ட கலப்பு செய்திகளினால் எதிர்பாராத விதமாக தடுக்கப்பட்ட சம்பவம் தர்மசீலன் குடும்பத்தினருக்கு மட்டும் முதல் தடவையாக ஏற்படவில்லை.
கடந்த வருடம் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நடந்துள்ளது. பிலடெல்பியா சென்ற இவரின் கடவுச்சீட்டு தொலைந்து விட்டது. அதிகாரிகள் இவர் திரும்ப கனடா செல்ல முடியும் என திரும்ப திரும்ப உறுதியளித்த போதும் எயர் கனடா பிலடெல்பியாவிலிருந்து விமானம் ஏற இவரை அனுமதிக்கவில்லை.
தர்மசீலன் கனடிய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு கடவுச்சீட்டுக்கள் தொலைந்தமை குறித்து தெரிவிக்க அவர்கள் விமான நிறுவனத்துடன் கதைக்குமாறு தெரிவித்துள்ளனர்.ஏர் கனடா பிரதிநிதி இவர்கள் சுற்று-பயண ரிக்கெட்டுக்களை வாங்கியிருப்பதால் இவர்கள் குறித்த தகவல்கள் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் கணனிகளில் இருக்கும் என கூறியுள்ளார்.
மற்றொரு வழியால் இவர்களது அடையாளத்தை பியர்சன் சரிபார்க்க முடிந்தால் பயணம் செய்யமுடியும் என கனடிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் திரும்ப வேண்டிய திகதி ஏப்ரல் 24.குடும்பம் விமான நிலையத்திற்கு 5-மணித்தியாலங்களிற்கு முன்னர் வந்தனர்.யு.எஸ் சுங்க அதிகாரிகள் மற்றும் TSA அதிகாரிகள் இவர்களிடம் வழக்த்திற்கு மேலாக கேள்விகள் கேட்ட பின்னர் போர்டிங் லவுன்சிற்கு செல்ல அனுமதித்தனர்.
ஆனால் மற்றுமொரு விமானநிலைய பணியாளரால் அனுமதி மறுக்கப்பட தர்மசீலன் ஒட்டாவாவிலுள்ள அவசர பாஸ்போட் அவசர தொலை தொடர்பு சேவையுடன் தொடர்பு கொண்டார். அவர்களும் கடவுசீட்டின்றி கனடாவிற்கு செல்வது குற்றம் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் செல்ல வேண்டிய விமானம் சென்றுவிட்டது.
லாஸ் ஏஞ்சல்சிலுள்ள கனடிய தூதரகம் செல்லுமாறு ஏர் கனடா தெரிவித்தது.
அதிஷ்ட வசமாக ஒரு West-Jet ஏஜன்ட் சாரதி அனுமதி பத்திர அடையாளத்துடன் இவர்களிற்கு விமானத்தில் அனுமதியளித்தனர்.
தர்மசீலன் குடும்பத்தினர் எல்லையை கடந்து கனடா வந்தடைந்தனர்.ஆனால் விமானங்கள் மாறியதால் இவர்களது பொதிகள் தாமதிக்கப்பட்டன.
ஏயர் கனடா நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டது.
எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் விடுமுறையில் யு.எஸ். செல்ல இருப்பதாக தெரிவித்த தர்மசீலன் நிச்சயமாக எயர் கனடா மூலமாக இல்லை என தெரிவித்தார்.

ad

ad