புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2016

மார்ச் மாதத்திற்குள் கலப்பு நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் ; ஜ.நா நிபுணர்

உள்ளக விசாரணைகளை நடத்துவதற்காக எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கலப்பு நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட
வேண்டும் என ஜ.நா விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப்பிடம் சிவில் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
போர்க்குற்ற விசாரணையை நடத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவும் கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்படவேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜ.நா விசேட அறிக்கையாளர் பப்லோ நேற்று திங்கட்கிழமை ஸ்ரீலங்காவை சென்றடைந்தார்.
இவர் நேற்று மாலை ஜ.நா அலுவலகத்தில் சிவில்சமூக பிரநிதிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது ஜ.நா விசேட அறிக்கையாளரிடம் கலப்பு நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பாக சிவில் அமைப்பின் பிரதிநிதிகளால் எடுத்துக்கூறப்பட்டது.
ஜ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஸ்ரீலங்காவில் அமுல்படுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஜ.நா விசேட அறிக்கையாளரிடம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad