புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2016

வங்கதேச தீவிரவாதிகள் தாக்குதலில் இந்திய பெண் உட்பட 20 பேர் பலி!

வங்கதேச தலைநகர் டாக்காவில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் நடைபெற்ற சண்டை 12 மணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
எனினும், தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியர் ஒருவர் உட்பட 20 வெளிநாட்டினர் பலியாகியுள்ளனர்.
டாக்காவின் குல்ஷான் பகுதியில் உள்ள ஹோலி அரிஸ்டான் ஓட்டலில் புகுந்த ஐஎஸ் தீவிரவாதிகள், அங்கிருந்த வெளிநாட்டினரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர். இதையடுத்து வங்கதேச ராணுவத்தைச் சேர்ந்த கமாண்டோ படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். ஓட்டலில் பிணைக் கைதிகளாக சிக்கியவர்களை மீட்க முயன்ற போது, இரு தரப்பிற்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது.
12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சண்டையில், ஓட்டலில் பதுங்கியிருந்த 6 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். ஒரு தீவிரவாதியை உயிரோடு பிடித்தனர். தீவிரவாதிகள் வசம் பிணைக் கைதிகளாக சிக்கியிருந்த 13 பேரை ராணுவத்தினர் மீட்டனர். எனினும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் அரிஸ்டான் ஓட்டல் வரும் முன்பு, ஐஎஸ் ராணுவத்தினர் நிகழ்த்திய வன்முறை வெறியாட்டத்தில்  20 வெளிநாட்டினர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக்கொல்லப்பட்டனர்.
ஐஎஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்த 20 வெளிநாட்டவர்களில் , இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அடங்குவார். தாருஷி என்கிற அந்த இளம் பெண் படுகொலை செய்யப்பட்டதை, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
டாக்காவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டாக்கா தாக்குதலால் ஏற்பட்ட வேதனை, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என கூறியுள்ள மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீவிரவாதிகளின் சதிச் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததாக, மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ad

ad