புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2016

ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவியை பொறுப்பேற்கும் ஸ்லோவேகியா!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் மக்கள் தீர்மானித்ததால் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழ்நிலையிலும்,, சுழற்சி முறையில்,
ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவியை ஸ்லோவேகியா இன்று வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஸ்லோவேகிய தலைமை திட்டிட்டிருந்தாலும் கூட, பிரிட்டன் வெளியேறுவதால் ஏற்பட்டுள்ள சிக்கலுக்குத் தீர்வு காண்பதிலேயே அந்த நாட்டுக்கான 6 மாத தலைமைப் பதவிக்காலம் முடிந்துவிடும் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
   
ஸ்லோவேகிய பிரதமர் ராபர்ட் ஃபிகோவும் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் கிளாட் ஆகிய இருவரும் வியாழக்கிழமை இரவு விருந்தில் சந்தித்துக் கொள்வதற்கு முன்னதாக, பிரிட்டன் வெளியேற்றம் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ad

ad