புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2016

வடக்கு பொருளாதார மத்திய நிலைய விவகாரம் - சம்பந்தன் தலைமையில் நாளை முக்கிய கலந்துரையாடல்

பொருளாதார மத்திய நிலையம் வடக்கில் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலான கலந்துரையாடல் நாளை காலை 10
மணிக்கு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கலந்துரையாடலில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
   
வட மாகாணசபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தியும் அதன் பிரகாரம் தாண்டிக்குளத்திலேயே பொருளாதார மையம் அமையவேண்டும் எனக்கோரியும் வவுனியா மாவட்ட உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் கடந்த 27 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் வட மாகாண பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு முதலமைச்சர் முன்வைத்துள்ள யோசனைக்கு அமைவாக, முதலமைச்சரின் கரங்களை பலப்படுத்துவோம் என தெரிவித்து வவுனியாவில் விவசாயிகளினால் கடந்த 28 ஆம் திகதி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையிலே வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ad

ad